நாங்க ரெடி.. திமுக ரெடியா? ராகுல் மீட் முடிந்ததும் பட்டென பேச்சை மாற்றிய காங்கிரஸ்! கவனிச்சீங்களா?
டெல்லி: டெல்லியில் நடந்த காங்கிரஸ் தலைவர்கள் மீட்டிங்கிற்கு பின் அப்படியே காங்கிரஸ் குரலே மாறி உள்ளது. பெரிதாக திமுகவை அட்டாக் செய்து பேசாமல் இருந்த இப்போது விரக்தியில் பேச தொடங்கி உள்ளது.
அதாவது இத்தனை நாட்கள் பிரவீன் சக்ரவர்த்தி, எம்பி மாணிக்கம் தாக்கூர் போன்றவர்கள் மட்டுமே பேசி வந்தனர். ஆனால் இப்போது நேரடியாக தமிழக தேர்தல் பொறுப்பாளர் க்ரிஷ் ஜோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பேச தொடங்கி விட்டனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் மேலிடக் கூட்டம் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக-காங்கிரஸ் இடையிலான பத்தாண்டு கால உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. திமுகவுடன் கூட்டணியைத் தொடர்வதா அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கைகோர்ப்பதா என்பது குறித்து விவாதிக்க, காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தது.
தற்போது நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலையை வலுப்படுத்துவது குறித்து காரசாரமான விவாதங்கள் எழுந்ததாக தெரிகிறது.
காங்கிரஸ் குரலே மாறிவிட்டது
டெல்லியில் நடந்த காங்கிரஸ் தலைவர்கள் மீட்டிங்கிற்கு பின் அப்படியே காங்கிரஸ் குரலே மாறி உள்ளது. பெரிதாக திமுகவை அட்டாக் செய்து பேசாமல் இருந்த இப்போது விரக்தியில் பேச தொடங்கி உள்ளது.
செல்வப்பெருந்தகை மீட்டிங்கிற்கு பின் பேசுகையில், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடைசி நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததால் நிறைய பிரச்சனை வந்தது. நிறைய தர்மசங்கடம் ஏற்பட்டது. இன்னொரு பக்கம் கூட்டணி சரியாக அமைக்க முடியாமல் போனது.
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் காந்தி உட்பட இங்கே வர ரெடியாக இருக்கிறார்கள். ஆனால் திமுக ரெடியா? நாங்கள் ரெடி.. அவர்கள் ரெடியா?
சரியான நேரத்தில் கூட்டணி அமைத்தால்தான் பணிகளை செய்ய முடியும். பேச்சுவார்த்தை குழு அமைக்காததால் திமுக மீது எல்லோருக்கும் வருத்தம்தான் உள்ளது என்று கூறி உள்ளார்.
காங்கிரஸ் ஜோடங்கர்
காங்கிரஸ் ஜோடங்கர் பேசுகையில், திமுக உடனே பேச்சுவார்த்தை குழுவை அமைக்க வேண்டும். தொண்டர்கள் கோபத்தில், வருத்தத்தில் உள்ளனர். திமுக வேகமாக செயல்பட வேண்டும். கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்று, கூறி உள்ளார். இப்படி டெல்லியில் நடந்த காங்கிரஸ் தலைவர்கள் மீட்டிங்கிற்கு பின் அப்படியே காங்கிரஸ் குரலே மாறி உள்ளது.
ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்திய தகவல்களை நாளையே முதல்வர் ஸ்டாலினிடம் கூற உள்ளதாக கூறிய செல்வப்பெருந்தகை, திமுக உடனடியாக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
50 இடங்கள் அல்லது தவெக: தலைவர்களின் புதிய யோசனை
ராகுல் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒரு தரப்பினர், முக்கியமாக குறிப்பிட்ட தலைவர் ஒருவர்.. முக்கியமாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு (TVK) ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள், மேலிடத்திற்கு ஒரு துணிச்சலான பரிந்துரையை முன்வைத்துள்ளனர்.
அவர்கள் முன்வைத்த முக்கிய வாதங்கள் இதோ:
திமுகவிடம் 50+ இடங்கள்: திமுக கூட்டணியில் நீடிப்பதாக இருந்தால், வரவிருக்கும் தேர்தலில் குறைந்தபட்சம் 50 தொகுதிகளைக் காங்கிரஸ் கேட்டுப் பெற வேண்டும்.
தவெக-வுடன் கூட்டணி: திமுக அதிக இடங்களை ஒதுக்க மறுத்தால், நடிகர் விஜய்யின் தவெக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என ஒரு தரப்பு வலியுறுத்தியுள்ளது.
"தொங்கு சட்டசபை" மற்றும் "கிங் மேக்கர்" கனவு
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத "தொங்கு சட்டசபை" (Hung Assembly) சூழலை உருவாக்கும் என்று சில தலைவர்கள் மேலிடத்திடம் கணித்துக் கூறியுள்ளனர்.
"தமிழகத்தில் 2026-ல் தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தச் சூழலில், காங்கிரஸ் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களை வென்றால் மட்டுமே, நாம் 'கிங் மேக்கராக' உருவெடுக்க முடியும். அப்போதுதான் ஆட்சியில் அதிகாரப் பகிர்வையும் (Coalition Government) நம்மால் உறுதி செய்ய முடியும்," என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாம் 50 இடங்களில் வென்றுவிட்டால்.. திமுக, தவெக குடுமி நம்ம கையில் இருக்கும் என்று கூறி உள்ளனராம். கடந்த சில தேர்தல்களாக திமுகவின் தயவிலேயே குறைந்த இடங்களில் போட்டியிடுவதால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், அதிகாரத்தில் பங்கு பெறாதது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்துவதாகவும் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
விஜய் தொகுதியில் திமுகவின் வெற்றி முகம்! - யார் இந்த சத்தியவாணி முத்து? -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை!












Click it and Unblock the Notifications