ஏத்துக்க முடியாது..5வது வரிசையில் ராகுல்! கேபினட் அந்தஸ்து தெரியுமா? தெரியாதா? பாஜகவை விளாசிய காங்.,
சென்னை: டெல்லியில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கடைசி வரிசைக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேபினெட் அமைச்சர் அந்தஸ்த்துள்ள எதிர்க் கட்சி தலைவரான ராகுல் காந்தியை திட்டமிட்டு பாஜக அவமானப்படுத்தியுள்ளதாகவும், இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று 78வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. காலை 7.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து 11 ஆம் முறையாக சுதந்திர தின விழாவில் தேசிய கொடியேற்றிய பெருமையை பெற்றார்.

இதில் முப்படை வீரர்கள், துணை ராணுவப்படையினர் மற்றும் என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடந்தன. ராணுவத்தினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்றார். 2014ஆம் ஆண்டு முதல் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமல் இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பெற்றதால் காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது கேபினட் அமைச்சர் பதவிக்கு நிகரானது என்பதால் சுதந்திர தினம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சித் தலைவருக்கு முன்வரிசையில் மத்திய அமைச்சர்களுக்கு சமமாக இருக்கை ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை. முன்வரிசையில் மத்திய அமைச்சர்கள் அமர்ந்திருந்த நிலையில், ராகுலுக்கு கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் அதாவது ஐந்தாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கடைசி வரிசையில் ராகுல் காந்தி பின் இருக்கையில் அமர்ந்திருந்த புகைப்படமானது, சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பாஜக திட்டமிட்ட அற்பத்தனமான செயல் என விமர்சனங்கள் எழுந்தது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், அவர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதால், எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையை கடைசி வரிசைக்கு மாற்ற வேண்டியிருந்தது மத்திய அரசு விளக்கம் அளித்தது. இருந்தும் மோடி அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்தகைய மலிவான செயல்களில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நாடாளுமன்றத்தில் மக்களவையின் அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கின்ற திரு ராகுல் காந்தி அவர்களை தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கடைசி வரிசைக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கி ஒன்றிய பா.ஜ.க. அரசு அவமதித்துள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கிற பாதுகாப்பு அமைச்சகம் ஒலிம்பிக் வீரர்களை கௌரவப்படுத்த அவர்களை முன் வரிசையில் அமர்த்தியதால் இந்த நிகழ்வு ஏற்பட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒன்றிய கேபினெட் அமைச்சர்களாக இருக்கிற ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெ.பி. நட்டா, நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்பது கேபினெட் அமைச்சர்களுக்கு இணையான பதவியாகும். அந்த வகையில் பார்க்கும்போது கேபினெட் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகில் இடம் ஒதுக்காமல் பின் வரிசையில் இடம் ஒதுக்கியிருப்பது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை ஆகும்.
அதேபோல அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு மல்லிகார்ஜூன் கார்கே அவர்களுக்கு ஐந்தாவது வரிசையில் தான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்ற ஜனநாயகத்தில் மிகுந்த எழுச்சியோடு ஆற்றல் மிக்கவராக திரு ராகுல் காந்தி அவர்கள் செயல்படுவதை சகித்துக்கொள்ள முடியாத மோடி அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்தகைய மலிவான செயல்களில் ஈடுபட்டு வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்." என கூறியுள்ளார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications