அரசியலில் ஆர்வமின்றி ஒதுங்கும் இளைஞர்கள்! கல்வித்துறை கண்டிப்பாக இதை செய்யணும்! காங்கிரஸ் வேண்டுகோள்
சென்னை: அரசியலில் ஆர்வமின்றி இளைஞர்களும், மாணவர்களும் ஒதுங்கும் நிலையில், அவர்கள் மத்தியில் ''கக்கன்'' திரைப்படத்தை தமிழக கல்வித்துறை கொண்டு சேர்க்க வேண்டும் என காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பி கக்கன் திரைப்படத்தை மாணவர்களை காணச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் ரஞ்சன் குமார் விடுத்துள்ள பதிவு வருமாறு;

தியாக சீலர் கக்கன் வாழ்க்கை வரலாற்றை திரைக்காவியமாக தயாரித்து தமிழ்நாடு முழுவதும் நேற்று திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அரசியலில் நேர்மை, எளிமை, துய்மை, ஆகியவற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்த கக்கன் வாழ்க்கை வரலாற்றை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்கிற வகையில் படைக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலன், உள்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை அமரர் கக்கன் வகித்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாய நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளதை இத்திரைப்படம் மூலம் காண முடிகிறது.
வெறுப்பு அரசியல் மற்றும் சுயநல அரசியலால் ஆர்வமில்லாமல் ஒதுங்கி நிற்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இத்திரைக் காவியத்தை கொண்டு சேர்க்கும் வகையில் மாநகராட்சி. அரசு பள்ளி. கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கண்டுகளிக்கின்ற வகையில். தமிழக கல்வித்துறை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இத்திரைபடத்தை காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் அவர்களை மிகவும் பணிவுடன் வேண்டிக் கேட்டு கொள்கிறோம். இக்கோரிக்கையை ஏற்றுக் கொள்வதன் மூலமாக இளைய சமுதாயத்தினரிடையே தியாகத்தை போற்றுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications