கூட்டணி குறித்து குழப்பும் வகையில் பேசினால் நடவடிக்கை – காங்கிரஸ் கட்சி அதிரடி தீர்மானம்
சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் கூட்டணி குறித்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பொது வெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது [Congress].
காங்கிரஸ் தீர்மானம்
காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேர் பகுதியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி. வேணு கோபால், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 75 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முக்கியமாக ஆட்சி அதிகாரம் பங்கு குறித்து யாரும் பொது வெளியில் பேசக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து பொது வெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணியில் குழப்பம் ஏற்படும் வகையில் கருத்துகள் கூறுவதை தவிர்த்திருக்க வேண்டும். கட்டுப்பாட்டை மீறி கருத்துகள் கூறப்படுவதால் கூட்டணி கட்சிகள் இடையே இணக்கமற்ற சூழல் ஏற்படுகிறது.
அதிரடி முடிவு
கட்சியின் அறிவுறுத்தலை மீறி பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும். கட்சியின் அறிவுறுத்தலை மீறுவதால் காங்கிரஸ் நலன் பாதிக்கப்படுகிறது. எனவே கட்சியின் அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications