விருப்ப மனு வழங்க கால அவகாசத்தை நீட்டித்தது காங்கிரஸ் கட்சி.. இதுவரை 4,000 பேர் விருப்பம்!
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு வழங்குவதற்கான கால அவகாசம் ஜனவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் கட்டணமில்லா விருப்ப மனுக்கள் இன்று வரை பெறப்படும் என அறிவித்திருந்த நிலையில், இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கலாம் என்று அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை அளிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கட்டணமில்லா விருப்ப மனு படிவம் வழங்கும் பணி கடந்த டிச.10 ஆம் தேதி தொடங்கியது.
விருப்ப மனுக்களை டிசம்பர் 31 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பெறலாம் எனவும், நிறைவு செய்த படிவத்தை கடைசி நாளான டிச. 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விருப்ப மனு வழங்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் அளித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications