"இதுதான் அரசியல் அறமா? சந்தர்ப்பவாதம்” காங்கிரஸ் தலைமை முடிவுக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் ராஜினாமா!
சென்னை: சந்தர்ப்பவாதத்திற்காக தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர். தேசிய மாணவர் யூனியனின் செயலாளர் தயானந்த் கார்த்திக் மற்றும் AIPC நிர்வாகி பிரனேஷ் பாலாஜி ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளனர். தவெக கூட்டணியில் இணைந்ததும் காங்கிரஸ் நிர்வாகிகளின் விலகல் அக்கட்சி தலைமைக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. அக்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய், அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தவெகவின் பலம் 107 ஆக குறையும்.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், தவெகவுக்கு கூடுதலாக 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு தற்போது காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தரப்பிலிருந்து 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இன்னும் 6 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். இந்தச் சூழலில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதிதாக அமையும் தவெக அரசில் காங்கிரஸ் பங்கு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக இருக்கும் நிலையில், அடுத்து வரும் உள்ளாட்சி தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை தவெக உடனான கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு, கட்சிக்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கட்சித் தலைமையின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சந்தர்ப்பவாதத்திற்காக தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்.
தேசிய மாணவர் யூனியனின் செயலாளர் தயானந்த் கார்த்திக் மற்றும் AIPC நிர்வாகி பிரனேஷ் பாலாஜி ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளனர். தவெக கூட்டணியில் இணைந்ததும் காங்கிரஸ் நிர்வாகிகளின் விலகல் அக்கட்சி தலைமைக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
தேசிய மாணவர் யூனியனின் செயலாளர் தயானந்த் கார்த்திக் வெளியிட்டுள்ள பதிவில், "பதவியைத் தாண்டி எனக்கு என் சுயமரியாதையும், என் மண்ணின் அரசியல் அறமும் தான் முக்கியம். உழைப்புக்கு மதிப்பற்ற, விசுவாசத்திற்கு இடமில்லாத இந்த அமைப்பில் இருந்து வெளியேறுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் அலிம் அல் புஹாரி வெளியிட்டுள்ள பதிவில், "கொள்கைப் பிடிப்பே அரசியல், சந்தர்ப்பவாதம் அல்ல. இதே சந்தர்ப்பவாதத்தை, பா.ஜ.க வும் அதிமுகவும் செய்து வருகிறது. இப்போது நாம் அதை செய்யக்கூடாது." எனத் தெரிவித்துள்ளார்.
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications