காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று தமிழகம் வருகை.. கூட்டணி தொடர்பாக அவசர ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. திமுகவுடன் நீண்ட காலமாக காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. ஆனால் சமீபகாலமாக அந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகளிடையே பனிப்போர் நிலவி வருகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று சென்னை வருகிறார். கூட்டணி தொடர்பாக அவர் அவசர ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்களே உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுக, ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெக வும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இதுவரை இல்லாதளவுக்கு தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவுவது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.

Congress Girish Chodankar

காங்கிரஸ் குளறுபடி

கூட்டணிகள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மதுராந்தகத்தில் தங்கள் பிரச்சார கூட்டத்தை நடத்திவிட்டனர். திமுக கூட்டணி வலுவாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் பிரச்சனை எழுந்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற கோரிக்கையுடன் காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் திமுக நிர்வாகிகளுடன் மல்லு கட்டுகிறார்கள்.

பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சில நிர்வாகிகள் திமுகவுக்கு எதிரான கருத்துகளையும், தவெக வுக்கு ஆதரவான கருத்துகளையும் கூறி வருகிறார்கள். திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றும் தவெகவுடன் இணைந்து கட்சியையும் வலிமைப்படுத்தலாம் என்றும் காங்கிரஸ் மேலிடத்திற்கு ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

திமுக காங்கிரஸ் கூட்டணி

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார். மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி நேரடியாக திமுக ஆட்சி குறித்தும், திமுக ஐடி விங் குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கு திமுக தரப்பிலும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்தப் பிரச்சனைகளை சரி செய்யும் வகையில் திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி கடந்த வாரம் டெல்லி சென்றார். அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி குறித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கிரிஷ் ஜோடங்கர் வருகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் திமுகவுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகிறார்கள். இதனிடையே கூட்டணி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் திமுகவினருடன் பேசுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் இன்று சென்னை வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார். அந்தப் பயணம் திடீரென ரத்தாகிவிட்டது.

இந்நிலையில், கிரிஷ் சோடங்கர் இன்று சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் அவர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். கூட்டணி, தொகுதி பங்கீடு, திமுகவுடன் சுமூக உறவு பேணுதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+