கேஎஸ் அழகிரிக்கு எதிராக திரும்பிய மாவட்ட தலைவர்! மாவட்ட தலைவர் பதவியையே தூக்கி எறிந்து.. பரபர பேச்சு
சென்னை: காங்கிரஸ் கட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கோஷ்டி மோதல் விவகாரம் இப்போது அடுத்தகட்டத்திற்கே சென்றுவிட்டது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி என்றாலே எல்லாரும் சொல்வது கோஷ்டி பூசல் தான். கட்சியின் மூத்த தலைமை தொடங்கி மாவட்டம், வட்டாரம் வரை திரும்பிய பக்கமெல்லாம் கோஷ்டி பூசல்கள் தான்.
பல நேரங்களில் இது அடிதடியிலும் கூட முடிந்துள்ளது. அப்படியொரு சம்பவம் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அரங்கேறியது.

காங்கிரஸ்
2024 மக்களவை தேர்தல் குறித்த முக்கியமான ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஸ்.எஸ். அழகிரி, பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் கலந்து கொண்டார், அந்த நேரம் பார்த்து, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

மோதல்
பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படாத நிலையில், அப்போது திடீரென போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது அப்படியே அடிதடியாகவும் மாறியது. இதில் காங்கிரஸ் தொண்டர்கள் சிலருக்குக் காயம் ஏற்பட்டது. அவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

நடவடிக்கை
இதற்கிடையே இந்த மோதலுக்கு ஒரே காரணம் ரூபி மனோகரன் என்றும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதனால் அவர் கட்சியில் இருந்தே நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து நேரில் விளக்கமளிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைவர் காமராஜ் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

காமராஜ்
இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் வைத்து மாவட்ட தலைவர் காமராஜ் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.. அப்போது பேசிய காமராஜ், "கடந்த 15ஆம் தேதி நடந்த கட்சிக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்கு மாநிலத் தலைவரும் மாநிலப் பொருளாளரும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால், அவர்கள் பொறுப்பேற்கவில்லை.v

ரொம்ப தப்பு
மாறாக மாநிலப் பொருளாளர் மற்றும் எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வதும் எந்த விதத்தில் சரி. மேலும், மாவட்டத் தலைவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்ட தொண்டர்களின் கோரிக்கை என்னவென்று கேட்காமல் அவர்களை அவமானப்படுத்தித் தாக்குவது தலைமைக்கு அழகு அல்ல..

ராஜினாமா
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 6 பேர் விடுதலையைக் கண்டித்துக் கண்டன தீர்மானம் நிறைவேற்றவில்லை. மேலும், 6 பேர் விடுதலையை எதிர்த்து கட்சி நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன். எனது உயிர் மூச்சு உள்ளவரைக் காங்கிரஸ் கட்சியில் தான் பயணிப்பேன். மாற்றுக் கட்சிக்குச் செல்ல மாட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications