சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவகங்கையில் எச் ராஜாவுக்கு டஃப் கொடுக்கும் வேட்பாளர் யார்.. வலை வீசி தேடி வரும் காங்கிரஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Congress Candidates List: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    சென்னை: சிவகங்கையில் எச் ராஜாவுக்கு இணையாக டஃப் கொடுக்கும் வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு, தேர்தல் பிரசாரங்களையும் கட்சிகள் தொடங்கிவிட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சி கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறதே என தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்றைய தினம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் சிவகங்கையில் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை.

    காங். வேட்பாளர்கள்.. ஒரு திருப்பம்.. ஒரு குழப்பம்.. ஒரு காமெடி! ஒரு மாற்றமும் உண்டு! காங். வேட்பாளர்கள்.. ஒரு திருப்பம்.. ஒரு குழப்பம்.. ஒரு காமெடி! ஒரு மாற்றமும் உண்டு!

    சிவகங்கை

    சிவகங்கை

    இதுவரை 9 தொகுதிகளுக்கு அறிவித்த வேட்பாளர்களின் பட்டியலில் எந்த சொதப்பலும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளது என்றே கூறலாம். ஆனால் சிவகங்கையில் மட்டும் ஏன் குழப்பம் என தெரியவில்லை.

    எச் ராஜா களம்

    எச் ராஜா களம்

    அங்கு போட்டியிட சரியான ஆட்கள் இல்லையா. இல்லை இருந்தும் அவர்களை தேர்வு செய்வதில் நீடிக்கும் குழப்பமா என புரியவில்லை. இந்த குழப்பத்தை பார்த்தால் சிவகங்கையில் பாஜக சார்பில் எச் ராஜா போட்டியிடுகிறார்.

    சாரணர் இயக்க தேர்தல்

    சாரணர் இயக்க தேர்தல்

    சாரணர் இயக்கத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த இவரை எதிர்க்க சரியான போட்டியாளரை நிறுத்த வேண்டும் என்பதே காங்கிரஸின் எண்ணமாக உள்ளது. எச் ராஜாவை எதிர்த்து நிற்க ப.சிதம்பரம் அல்லது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

    சிவகங்கை காங்கிரஸின் கோட்டை

    சிவகங்கை காங்கிரஸின் கோட்டை

    காங்கிரஸின் கோட்டை எனப்படும் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் 7 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் அவரை வேட்பாளராக ஏற்றுக் கொள்ள அக்கட்சியில் ஒரு மித்த கருத்து நிலவவில்லை. இதனால் இந்த தொகுதிக்கு வேட்பாளரை அறிவிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும் ஓரிரு நாளில் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

    English summary
    Congress party is in search of suitable candidate to compete in Sivagangai Loksabha constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X