உதயநிதி பேசியதில் எந்த தவறும் இல்லை.. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நிர்மலா சீதாராமன்.. காங்கிரஸ் தாக்கு!
சென்னை: தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில் பேசியுள்ள நிர்மலா சீதாராமனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தரக் குறைவும் இல்லை என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார். கேஎஸ் அழகிரி பேசுகையில், "இந்தியா கூட்டணி கூட்டத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருநாள் சென்று வந்ததை வைத்து அரசியல் செய்கிறார்கள். மழை தொடங்கியதுமே அமைச்சர்களையும், அதிகாரிகளையும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து விட்டார் முதலமைச்சர்.

தமிழகத்துக்கு மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியாக எதுவும் ஒதுக்கவில்லை. தர வேண்டிய நிதியை மட்டுமே தந்துள்ளார்கள். தற்போது ஏற்பட்ட பெரும் சேதத்துக்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும். நிவாரணம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தரக்குறைவும் இல்லை. அவர் பேச்சு வழக்கில் பேசுவதுபோல் பேசி உள்ளார். இதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையான மழையின் காரணமாக இதுவரை காணாத பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிலிருந்து மீட்பதற்காக தமிழக அரசு தீவிரமான பல நடவடிக்கைகள் எடுத்து மக்கள் இயல்பு நிலை மாறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இந்த சூழலில் மறுபடியும், கடந்த 17, 18 ஆகிய இரண்டு நாட்களில் தென்மாவட்டங்கள் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் கடுமையான மழையின் காரணமாக மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டதோடு விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இதை மீட்பதற்குப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ 10 அமைச்சர்கள், 15 ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகள் தீவிரமாக நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதை எதிர்கொள்வதற்குரிய நிவாரண நிதி கேட்பதற்காக தமிழக முதலமைச்சர் தலைநகர் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கியிருக்கிறார். அந்த கோரிக்கை மனுவில் ஏறத்தாழ தமிழக முதலமைச்சர் கேட்டது 21 ஆயிரம் கோடி ரூபாய். முதல் தவணையாக 2000 கோடி ரூபாய் கேட்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் பாதிக்கப்பட்ட தென்மாவட்டப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூழலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்க முடியாது. தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. கூடுதல் சிறப்பு நிதி வழங்க முடியாது" என்று தமிழ்நாட்டின் மீது மிகுந்த வன்மத்தை வெளிப்படுத்துவது போன்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும். கிட்டத்தட்டத் தேசிய பேரிடர் அறிவிக்க முடியாது என்று சொல்வதன் மூலமாக தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை நிராகரித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறார்.
பொதுவாக 450 கோடி ரூபாய் கொடுத்ததை பற்றி நிர்மலா சீதாராமன் கூறுகிறார். அது மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஏற்கனவே வழங்கப்பட்ட தொகையாகும். நாம் கேட்பது சிறப்பு நிதி. இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற பாதிப்பிலிருந்து தமிழக மக்களை மீட்பதற்காக நாம் கேட்கும் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, ஏற்கனவே நமக்கு வழங்கப்பட்ட தொகையை புதிதாக வெள்ள நிவாரண நிதியாகக் கொடுத்தது போன்று நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதை ஏற்க முடியாது. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிற செயலாகும். நம்மைப் பொறுத்தவரை மாநில பேரிடர் நிவாரண நிதி என்பது தமிழ்நாட்டிற்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்டது. நாம் கேட்பது தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு சிறப்பு நிதி.
நாம் கேட்டிருக்கும் தொகையை அவர் வழங்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இதுவரை ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரண நிதிக்காக, பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பேரிடரை எதிர்கொள்ள உரிய நிதியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக தமிழ்நாட்டை வஞ்சிக்கிற வகையில் அவர் இன்று அறிவிப்பை வெளியிட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நீண்ட காலமாகவே தமிழ்நாட்டு மக்கள் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருவதைத் தான் நிர்மலா சீதாராமன் அவர்களின் அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. இதை தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த வேதனையோடு எதிர்கொண்டு வருகிறார்கள். ஆனால் எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களைப் பாதிப்பிலிருந்து மீட்கும் முயற்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில் பேசியுள்ள நிர்மலா சீதாராமனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு










Click it and Unblock the Notifications