எங்கிருந்துதான் இதெல்லாம் வருதோ.. ஐ யாம் காங்கிரஸ்.. விலக மாட்டேன்.. குஷ்பு
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவது குறித்து ட்விட்டரில் குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்
சென்னை: "எங்கிருந்துதான் இதெல்லாம் வருது.. காங்கிரசில் இருந்து விலகுகிறேனா? நானா?" என்று குஷ்பு கேள்வி எழுப்பி அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
சீட் விவகாரம் பற்றி பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, சென்னையில் கராத்தே தியாகராஜனுக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்று சொல்லப்பட்டது.
பிறகு அது இல்லாமல் போனது. 10-ல் ஒன்று பாண்டிச்சேரிக்கு போக, மீதமுள்ள 9 சீட்டில் குஷ்புக்கு ஒன்று தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ராகுல்காந்தி
குறிப்பாக திருச்சி அல்லது சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்றும், அதற்காக வேட்புமனுகூட தாக்கல் செய்ததாகவும் தகவல் வெளியாகியது. அதுபோல குஷ்புவும் போட்டியிட என்னவோ ஆர்வம் காட்டிதான் வந்தார். இதை பற்றி கேட்டதற்கு, "ராகுல்காந்தி என்ன சொல்கிறாரோ, அதற்கு கட்டுப்படுவேன்" என்றும் வெளிப்படுத்தி இருந்தார்.

விளக்கம் தரும் ட்வீட்
ஆனால் 9 பேர் லிஸ்ட்டில் குஷ்பு பெயர் இல்லை. அதனால் பிரச்சாரத்துக்குதான் வழக்கம்போல் வருவார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் பிரச்சாரமும் செய்யவில்லை. பிரச்சார கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறார் என்ற தகவல்கள் பறக்க ஆரம்பித்தன. இப்போது இதற்கு குஷ்புவே ஒரு ட்வீட் போட்டு எல்லாருடைய வாயையும் ஆஃப் செய்துள்ளார்!
|
ஐ யாம் காங்கிரஸ்
அந்த ட்வீட்டில், "காங்கிரஸிலிருந்து விலகுகிறேனா? எங்கே இருந்துதான் இதுபோன்ற செய்திகள் எல்லாம் வருகிறது? இந்த நாட்டை உருவாக்கிய ஓர் இயக்கத்தின் அங்கமாக நான் இருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் ஊழியராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். நான் ராகுல் காந்தியை மிகவும் நம்புகிறேன். நாளை முதல் தென் மாநிலங்கள் முழுவதும் பிரச்சாரம் தொடங்குகிறேன். டைம் இருந்தால் வடமாநிலங்களிலும் பிரசாரம் மேற்கொள்வேன். ஐ யாம் காங்கிரஸ்" என்று தெரிவித்துள்ளார்.

ஜெயப்பிரதா
இருந்தாலும்.. பாஜகவில் சேர்ந்த மறுநாளே ஜெயப்பிரதாவுக்கு சீட் தரப்பட்டது! மராட்டியத்தில் கட்சியில் சேர்ந்த மறுநாளே ஊர்மிளாவுக்கு சீட்டு தரப்பட்டது. ஆனால் கட்சியில் 7 வருஷமாக இருக்கும் குஷ்புக்கு சீட்டு வழங்காதது மனசு அளவிலாவது குஷ்புக்கு வருத்தம் இருக்கத்தானே செய்யும் என்று பரவலாக பேசப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications