காங்கிரஸை கண்டு கொள்ளாத திமுக? கட்சிக்குள் புரட்சி படை! விஜய் உடன் கூட்டணி.. டெல்லிக்கு பறந்த கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தவெகவுடன் கூட்டணி என்ற பேச்சு மீண்டும் எழ தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் திமுக, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளரவிடாமல் செய்வதாகவும், இதனால் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என கிரிஷ் சோடங்கருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு தலைவர்கள்.

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், திமுக இன்னும் காங்கிரசுக்கு தெளிவான பதிலை வழங்கவில்லை என சொல்லப்படுகிறது.

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 25 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக தலைமை உறுதி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டுமா, இல்லையா என்பது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே விவாதம் அதிகரித்து வருகிறது.

Congress TVK DMK

திமுக கூட்டணி

இதற்கிடையில், திமுக தனது கூட்டணி கட்சியாக காங்கிரஸை வைத்துக் கொண்டே, மாநில அரசியலில் வளர விடாமல் தடுக்கிறது என்பதே சில காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டு. இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு தலைவர்கள் இணைந்து, கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில்," திமுகவுடன் இருக்கும் தற்போதைய கூட்டணி காங்கிரஸுக்கு நன்மை தரவில்லை என்றும், மாற்று கூட்டணி, குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) உடன் அமைப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி

டெல்லி காங்கிரஸ் தலைமைய, தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது. அதற்காக அதிக தொகுதிகள் மற்றும் அரசில் பங்கு கிடைக்க வேண்டும் என விரும்புகிறது. இந்த நோக்கத்துடன், காங்கிரஸ் சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டு, திமுக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் திமுக தரப்பில், "தேர்தல் தேதி அறிவித்த பின் மீண்டும் பேசலாம்" என்ற பதில் மட்டுமே கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதை, காங்கிரஸ் தலைமை திமுகவின் அரசியல் தந்திரமாகவே பார்க்கிறது.

தொகுதி ஒதுக்கீடு

திமுக சொல்லும் எண்ணிக்கையையே இறுதியில் ஏற்க வேண்டிய நிலை வராமல் தடுக்கவே, தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தொகுதி எண்ணிக்கை மற்றும் ஆட்சிப் பங்கு பற்றிய தெளிவை பெற வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது. இதற்கு மாறாக நடந்தால், திமுகவுடன் கூட்டணி தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்பதே சில தலைவர்களின் நிலைப்பாடு. மேலும், பாஜகவையே காங்கிரஸின் பிரதான எதிரியாகக் கருதினாலும், தமிழகத்தில் திமுகவும் காங்கிரஸ் வளர்ச்சியை கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கிறது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுதி பிரிப்பு

பாஜகவும் திமுகவும் தோற்றத்தில் வேறு வேறு சக்திகளாக இருந்தாலும், அரசியல் வகையில் இரண்டும் காங்கிரஸின் வளர்ச்சியைத் தடுக்கின்றன என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் தமிழகத்தில் சுய பலத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. சுய சிந்தனை அடிப்படையிலான கூட்டணியே காங்கிரஸுக்கு நன்மை தரும் என்பதே அந்தக் கடிதத்தின் மைய கருத்தாக கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் கூட்டணி நிலைகள் மாற்றம் அடையக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+