இதுதான் டாப்.. மோடிக்கு அடிபணியாமல் ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்.. ஜோதிமணி எம்.பி. புகழாரம்
சென்னை: பிரதமர் மோடிக்கு அடிபணியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருவதாக காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
Recommended Video
திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது என ஒற்றை வரியில் கடந்துவிட முடியாது என்றும் அந்தளவுக்கு முதல்வர் அர்ப்பணிப்புடன் மக்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் புகழாரம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் கடந்த ஆண்டு இதே நாளில் முதல்வராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை எந்தளவு இருந்தது என்பதும் பிறகு அதை அவர் கட்டுப்படுத்த முன்னெடுத்த பணிகள் எந்தளவு பாராட்டத்தக்கது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று எனக் கூறியுள்ளார்.
திமுக ஆட்சியின் ஓராண்டு பயணம் குறித்து காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்து கொண்ட தகவல் வருமாறு;

சிறந்த ஆட்சி
"தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் வந்த பிறகு தான் நமது உரிமைகள் நிலைநாட்டப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்து எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார். ஸ்டாலின் முதல்வராக வந்த பிறகு தான் மத்திய அரசின் தந்திரங்கள் எதுவும் இங்கு பலிக்கவில்லை. கடன், கொரோனா பரவல் என மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று இன்று இந்தியாவிலேயே சிறந்த ஆட்சி நிர்வாகத்தை ஸ்டாலின் வழங்கிக் கொண்டிருக்கிறார்."

இரண்டு பணிகள்
" என்னை பொறுத்தவரை முதலமைச்சருக்கு இரண்டு முக்கிய பணிகள் இருப்பதாக கருதுகிறேன். ஒன்று ஆளுநர் மூலம் மத்திய அரசு கொடுத்து வரும் குடைச்சலை சமாளித்து எதிர்க்கொண்டு எந்த சூழலிலும் மாநில உரிமைகளை விட்டுத்தராமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். இன்னொன்று மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதை வெறுமனே புகழ்வதற்காக உங்களிடம் சொல்லவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின்ன் உழைப்பை பார்க்கும் போது எனக்கே வியப்பாக இருக்கும். மழை என்றாலும் முதல் ஆளாக நிற்பார், நேரம் காலம் பார்க்கமாட்டார். இது பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. முதலமைச்சர் எப்போது தூங்குகிறார் என்று கூட யாருக்கும் தெரியாது என்கிறார்கள். அந்தளவுக்கு மக்கள் பணி மீது அக்கறை காட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்.

வாழ்த்துகள்
" இந்த தருணத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்தை பதிவு செய்து கொள்கிறேன். இன்னொரு விஷயம் குறிப்பிட்டாக வேண்டும், என்னவென்றால் அரசுத் துறை அதிகாரிகளை முதல்வர் தேர்வு செய்த விவகாரம் உள்ளபடியே பாராட்டுக்குரியது. ஒவ்வொரு துறைக்கும் இன்னாரை செயலாளராக நியமித்தால் நல்லா இருக்கும் என சிந்தித்து ஆராய்ந்து அதிகாரிகளை நியமித்துள்ளார் முதல்வர். ஒரு பெரிய கனவுடன் முதலமைச்சர் தமிழகத்தை வழிநடத்திச் செல்கிறார் என்பதை அவரது நடவடிக்கைகள் மூலம் உணர முடிகிறது."

அசுர உழைப்பு
"முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகம் பற்றி குறிப்பிட்டதை போல் அவரது தனிப்பட்ட செயல்பாடுகள் பற்றியும் சொல்லியாக வேண்டும். மிகவும் எளிமையாகவும் எளிதி அணுகக்கூடிய இடத்திலும் அவர் இருக்கிறார். எல்லா பிரச்சனைகளிலும் அவரே தலையிட்டு தீர்வு காண்கிறார். இது போன்ற செயல்பாடுகள் எல்லாம் உள்ளபடியே போற்றுதலுக்ககு உரியது. இன்னும் இதை விட சிறப்பால வரும் காலங்களில் அவரது ஆட்சி நிர்வாகம் இருக்கும் என நம்புகிறேன்."
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications