தமிழக பாஜகவினரின் 'அந்த' 14 வீடியோக்கள்.. காங். எம்.பி. ஜோதிமணி பகீர் போஸ்ட்- சீமானுக்கும் குட்டு!
சென்னை: அதிகார அச்சுறுத்தலால் தமிழக பாஜகவினரின் பாலியல் லீலைகள் தொடர்பான 14 வீடியோக்கள் முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்.பி.ஜோதிமணி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது பாலியல் புகார்கள் நிறைய இருப்பதாகவும் பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்றும் அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி எச்சரித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. ஆனால் இதனை பாரதிய ஜனதா கட்சி மிக கடுமையாக மறுத்தது. இது பாஜக தலைவர்கள் மீதான அவதூறு எனவும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பாஜகவைச் சேர்ந்த மதன் என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டார். தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன், பெண் நிர்வாகி ஒருவருடன் ஆபாசமான செய்கைகளுடன் உரையாடுவதாக அந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து கே.டி.ராகவன் தமது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

கே.டி.ராகவனுக்கு சீமான் ஆதரவு
இந்த வீடியோ வெளியிட்டதன் பின்னணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருப்பதாக மதன் குற்றம்சாட்டி இருந்தார். அது தொடர்பான ஆடியோக்களையும் மதன் வெளியிட்டிருந்தார். இதனை பாஜக தலைவர் அண்ணாமலை மறுத்ததுடன் மதனை கட்சியில் இருந்தும் நீக்கினார். இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், யாரும் செய்யாததையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என கேள்வி எழுப்பினார்.

ஜோதிமணி- சீமான் மோதல்
சீமானின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் கே.டி.ராகவன் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசில் ஜோதிமணி புகார் கொடுத்திருந்தார். ஜோதிமணியின் இந்த கோபம் குறித்து கருத்து தெரிவித்த சீமான், அவ்வளவு கடுப்பாக இருந்தால் விஷம் குடிச்சு செத்துப் போ என காட்டமாக கூறினார். சீமானின் இந்த ஒருமைப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.

சதானந்த கவுடாவின் வீடியோவா?
இந்நிலையில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சதானந்தா கவுடாவின் பாலியல் சேட்டை வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று முதல் வைரலாகி வருகிறது. இதனை சதானந்த கவுடா மறுத்திருப்பதுடன் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இத்தகைய வீடியோக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வீடியோவின் உண்மைத் தன்மை இதுவரை உறுதி செய்யப்படவும் இல்லை.

தமிழக பாஜகவினரின் 14 பாலியல் வீடியோக்கள்
இந்த சம்பவம் தொடர்பாக ஜோதிமணி எம்.பி. தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழகத்தில் பாலியல் பாஜகவின் கே டி ராகவன் பாலியல் வீடியோவைத் தொடர்ந்து கர்நாடக பாஜகவின் முன்னாள் முதல்வர் சதானந்தகவுடாவின் பாலியல் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் இன்னும் வெளிவராத பாஜகவின் 14 வீடியோக்கள் பாஜகவின் அதிகார அச்சுறுத்தலால் முடக்கப்பட்டிருக்கிறது.

சீமானுக்கு ஜோதிமணி குட்டு
இந்தியா முழுவதும் பாலியல் பாஜக தலைவர்களின் பாலியல் குற்றங்களை தனிப்பட்ட பிரச்சினையாக கருத முடியாது. பாஜகவின் உள்ளும், வெளியிலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும். அதனால்தான் குற்றவாளிகளை பாஜக தொடர்ந்து காப்பாற்றிவருகிறது. தமிழக மக்கள் பாஜகவிடம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். "உலகில் யாரும் செய்யாததையா சதானந்த கவுடா செய்துவிட்டார் "என்று எந்த நேரமும் பாஜகவின் பி டீம் சீமான் களத்தில் குதித்து பாஜகவை காப்பாற்றி கரை சேர்க்கவும் வாய்ப்பிருக்கிறது. நாம் தான் குறிப்பாக பெண்கள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இவ்வாறு ஜோதிமணி எம்.பி. பதிவிட்டுள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications