பாஜகவில் சேருவது புதை குழியில் விழுவதற்கு சமம்! விஜயதாரணி மீது நடவடிக்கை.. மாணிக்கம் தாகூர் எம்பி!
சென்னை: பாஜகவில் விஜயதரணி இணைந்து புதை குழியில் விழுவதற்கு சமம் என காங்கிரஸ் கட்சி எம்பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி. இவர் அண்மைக்காலமாக காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி பாஜக அலுவலகத்திற்கு சென்ற அவர் மத்திய இணையமைச்சர் எல். முருகன் முன்னிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைந்தார்.

அவர் அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களால் நான் அக்கட்சியிலிருந்து விலக முடிவு செய்தேன். பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது.
இது அரசியலில் பெண்கள் தேவையான ஒன்று. அது போல் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டையும் பெற்று தரவுள்ளது. தமிழக பாஜக அண்ணாமலை தலைமையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு விஜயதாரணி தெரிவித்தார்.
செல்வப்பெருந்தகை: இந்த நிலையில் இதுகுறித்து செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது: விஜயதாரணி எங்கிருந்தாலும் வாழ்க. ஆனால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, விஜயதாரணி மீது கருணை வைத்து 3 முறை சட்டசபை உறுப்பினராக்கினார்.
காங்கிரஸ் கட்சி விஜயதாரணிக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. அவர் கட்சி பணியாற்றவில்லை என்றாலும் அவரை பெருமையுடன் நடத்தினோம். ஆனால் இந்த முடிவு என்பது மிகவும் துரதிருஷ்டவசமான முடிவு. என்னுடைய பார்வை என்னவென்றால் அவர் மீண்டும் காங்கிரஸுக்கு வருவார்.
ஏனென்றால் அங்கு சென்றவர்கள் எல்லாம் யாருமே மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரியும். இந்த தேசத்தை பாதுகாக்கிற வேளையில் விஜயதாரணி இப்படி கட்சி மாறியிருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும். எது எப்படியோ ஆல் தி பெஸ்ட் எங்கிருந்தாலும் வாழ்க என தெரிவித்துள்ளார்.
விஜய் வசந்த்: விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளது குறித்து கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த் ட்வீட் செய்துள்ளார். அதில், திருமதி. விஜயதரணி அவர்கள் மாற்று கட்சியில் இணைந்தது அவரை 3 முறை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த விளவங்கோடு தொகுதி மக்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் செய்த மிகப்பெரிய துரோகம். மக்கள் அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என கூறி உள்ளார்.
மாணிக்கம் தாகூர்: அது போல் விஜயதாரணி காங்கிரஸில் இணைந்தது குறித்து எம்பி மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது: விஜயதாரணி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜகவில் விஜயதாரணி இணைந்தது புதை குழியில் விழுவதற்கு சமம். இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications