அதிருப்தியில் உள்ளாரா குஷ்பு.. சமாதானம் செய்ய பெரிய பதவியை தூக்கிக் கொடுக்கும் காங்கிரஸ்?
சென்னை: நடிகை குஷ்புவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் குஷ்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமித்ஷாவுக்கு விரைவில் குணமடைய வாழ்த்து கூறினார். இதிலிருந்து இன்னும் சில விஷயங்களை அவர் செய்தது அவருக்கு பாஜக மீதான ஒரு ஈர்ப்பு இருப்பதை போல் தோற்றமளித்தது.
மேலும் சென்னையில் தினேஷ் குண்டுராவ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தன்னை அழைக்கவே இல்லை என குஷ்பு வேதனை தெரிவித்தார்.

குஷ்பு
இதனால் காங்கிரஸிலிருந்து பாஜகவில் சேர போவதாக தகவல்கள் வெளியானது. அதை குஷ்பு அப்பட்டமாக மறுத்தார். எனினும் தொடர்ந்து அந்த தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குஷ்பு டெல்லியில் குடும்பத்தினருடன் இருந்து கொண்டு பாஜக தலைவர்களுடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ்
இதுகுறித்து குஷ்புவிடம் கேட்ட போது தேவையற்ற தகவல்களுக்கு தான் பதில் சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி விழாவில் பங்கெடுத்தும் உள்ளார். டெல்லியில் காங்கிரஸ் மேலிட தலைவர்களையும் அவர் சந்தித்து பேசி வருவதாக கூறப்படுகிறது.

தமிழக காங்கிரஸ்
அதே நேரம் அகில இந்திய செயலாளர் கே.சி. வேணுகோபாலையும் சந்தித்து பேசியுள்ளார். இந்த நிலையில் குஷ்புவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக காங்கிரசுக்கு விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், வசந்தகுமார் உள்பட 5 செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

பெண்கள்
அந்த சமயத்தில் காங்கிரஸில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் சிறுபான்மையினருக்கு பதவி வழங்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் வசந்தகுமார் மரணம் அடைந்துவிட்டதால் செயல்தலைவர் பதவி காலியாகவே உள்ளது. இதனால் இந்த பதவி குஷ்புவுக்கு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications