விஜயை பார்க்கலாமா? சீரியாஸாக விவாதித்த ராகுல் காந்தி - சோனியா.. விஜய் கேட்ட டைம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்திக்க தீவிரமாக முயன்று வருகிறார். விஜயின் இந்த முயற்சி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சந்திப்புக்கு நேரம் ஒதுக்கலாமா என்பது குறித்து ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்கள் கட்சி மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜயுடன் கூட்டணி வைக்க சின்ன கட்சிகள் கூட ரெடியாக இல்லை. அப்படி இருக்க.. பெரிய கட்சியான நாம் விஜயுடன் சென்றால் சரியாக இருக்காதே. அவரை சந்திக்கலாமா வேண்டாமா என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி - சோனியா காந்தி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

congress

விஜய் - காங்கிரஸ் கூட்டணி திட்டம்

தேர்தலுக்குத் தயாராவதற்காக விஜய் பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். ராகுல் காந்தியுடனான சந்திப்பு தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியைப் பிரிக்கும் நோக்கிலும் இச்சந்திப்பு இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.

ராகுல் காந்தியைச் சந்திப்பதற்கான அனுமதிக்கு விஜய் தரப்பு கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் காங்கிரஸ் தலைமைக்கு தூது அனுப்பியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், இது தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், இச்சந்திப்பு நடந்தால் அது தி.மு.க-வை கடுமையாக அதிருப்தியடையச் செய்யும் என்பதால், ராகுல் காந்தி இதற்கு ஒப்புக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜயுடன் கூட்டணி வைக்க சிறிய கட்சிகள்கூட தயக்கம் காட்டும் சூழலில், பெரிய கட்சியான காங்கிரஸ், இவரைச் சந்திப்பது சரியாக இருக்குமா என ராகுல், சோனியா காந்தி விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர், கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கூட்டணி மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். "கட்சி அழிந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் வளர வேண்டுமென்றால், தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியே வரவேண்டும்."

"தமிழக வெற்றிக் கழகம் அல்லது அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால், ஆட்சியில் காங்கிரஸுக்குப் பங்கு கிடைக்கும். 50, 60 ஆண்டுகளாக அரசியல் அதிகாரம் காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டுமானால், தமிழக வெற்றிக் கழகம் அல்லது அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பது அவசியம். அப்போதுதான் நமக்கு பதவி கிடைக்கும். அமைச்சர் பதவிகள் கிடைத்தால்தான் கட்சி வளரும்" என்று அவர்கள் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

விஜயுடன் ராகுல் காந்தி சந்திப்பு

விஜயின் தூது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. விஜயின் முயற்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி, ராகுல் காந்தியின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாக தகவல்கள் நிலவுகின்றன. ஆனாலும், காங்கிரஸ் தரப்பு நிர்வாகிகள் சிலர், "கூட்டணி பற்றி இப்போது பேசுவது தேவையற்றது. தி.மு.க-வுடன் கட்சி மேலிடத்துக்கு நல்ல நெருக்கம் இருக்கிறது. கூட்டணி பற்றி அவர்களே முடிவெடுத்துக்கொள்வார்கள்" எனக் கூறியுள்ளனர்.

விஜய், காங்கிரஸ் கட்சிக்குத் தூது அனுப்பியுள்ளதாக வெளியான தகவல்கள் அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களை உருவாக்கியுள்ளன. இந்த சந்திப்பு குறித்த தகவல்கள் அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. காங்கிரஸ் தலைமையின் முடிவுகள், அரசியல் களத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+