எங்கள் முதல்வர் ஹை வோல்டேஜ் முதல்வர்.. அவரை நெருங்கவே முடியாது.. ஆளுநருக்கு செல்வபெருந்தகை பதில்
சென்னை: எங்கள் முதல்வர் ஹை வோல்டேஜ் மின்சாரம், யாரும் நெருங்க முடியாது என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டார். இதையடுத்து இன்றைய தினம் தமிழக சட்டசபை சிறப்பு கூட்டம் கூடியது.
அப்போது நீட் விலக்கு மசோதா மீது உறுப்பினர்கள் பேசினர். அதில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ செல்வபெருந்தகை பேசினார். அவர் பேசுகையில் ஆளுநர் நிறைய முதல்வர்களை பார்த்திருக்கலாம்.

முதல்வர் இல்லை
ஆனால் நம்முடைய முதல்வர் அப்படிப்பட்ட முதல்வர் இல்லை. சமூகநீதிக்காக குரல் கொடுக்கக் கூடியவர். ஆளுநர் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய முதல்வர் ஹைவோல்ட் முதல்வர். அவரை நெருங்கவே முடியாது. இவர் ஹைவோல்டேஜ் முதல்வராகத்தான் இந்தியாவில் உள்ள மற்ற மாநில முதல்வர்கள் பார்க்கிறார்கள்.

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதா
13.9.2021 ஆம் ஆண்டு சட்டசபையில் நீட் விலக்கு மசோதா எனும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பெரும்பான்மை சட்டசபை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் இந்த சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழக மக்களை அவமானப்படுத்தியதாகவே காங்கிரஸ் கருதுகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம்
இது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பேரவை. இந்தியாவில் 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திர அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் நவம்பர் 25 ஆம் தேதி ஒரு மிகப் பெரிய விவாதத்திற்குள்ளாக்கப்படுகிறது. அங்கிருந்தவர்கள் எல்லாம் இந்த சட்டங்களை எல்லாம் எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள் என சட்டமேதை அம்பேத்கரிடம் கேட்டனர்.

200 சட்டவிதி
நீதிமன்றத்திற்கு பதில் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த சட்டங்கள் மூலமாக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் என அம்பேத்கர் பதிவு செய்திருந்தார். நிறைய சட்டவிதிகள் குறித்து எழுதியிருந்தாலும், சட்டவிதி 200 ஐ பற்றி தெளிவாக எழுதியுள்ளார். முதல்முறையாக சட்டத் திருத்தம் கொண்டு வந்தது இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பேரவையில்தான். அதாவது ஆளுநர் அவரின் வரம்புக்குள் செயல்பட வேண்டும்.
Recommended Video

சட்டவிதி 200
குடியரசுத் தலைவருக்கான அதிகாரத்தை பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. சட்டசபையில் தீர்மானம் செய்த மசோதாவை ஆளுநர் உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்பதைத்தான் சட்டவிதி 200 சொல்கிறது. சட்டவிதி 46-இன் கீழ் இலவச கல்வி, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுதி, இலவச கல்வி பொருட்கள் வழங்குவது என்பதை பின்பற்றும் ஒரே மாநிலம் தமிழகம் என்பதை ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications