குஷ்புவுக்கு 24 மணி நேரம் கெடு! வீட்டை முற்றுகையிடுவோம்! சேரிக்கு 'Sorry' கேளுங்க! காங்.போர்க்கொடி!
சென்னை: சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களின் மனதை புண்படுத்தியதற்காக குஷ்பு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என காங்கிரஸ் திடீர் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து அவருடன் லியோ படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் அநாகரிகமான கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தேசிய மகளிர் ஆணையமும் தனது எதிர்ப்பை தெரிவித்தன.

இந்நிலையில், எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் இணையவாசி ஒருவர் குஷ்பூவிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்த குஷ்பூ, "திமுக குண்டர்கள் இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும். மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இது குஷ்புவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சேரி மொழி என்று எப்படி சொல்லலாம் என்று பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் குஷ்புவை மன்னிப்பு கேட்கச் சொல்லி அறிக்கை விடுத்திருந்த காங்கிரஸ் எஸ்.சி.துறை தமிழக தலைவர் ரஞ்சன் குமார், மாலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், குஷ்புவுக்கு சரமாரி கேள்விகள் எழுப்பியதோடு சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களின் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்றார். அதுவும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கெடு விதித்த ரஞ்சன் குமார், குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் வீட்டை தாங்கள் முற்றுகையிடுவோம் என எச்சரித்துள்ளார்.
மன்சூர் அலிகான் திரிஷா விவகாரம் கடந்த 2 நாட்களாக பேசப்பட்ட நிலையில் இப்போது சேரி மொழி என்று குறிப்பிட்டு குஷ்பு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications