அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி!
ஈரோடு: திமுக கூட்டணியில் இந்த முறை கூடுதல் கட்சிகள் இடம் பெற்றிருந்ததால், ஏற்கெனவே இடம்பெற்றிருந்த கட்சியிகளுக்கு தொகுதிகள் குறைந்த அளவில் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், உஷாராக காங்கிரஸ் மட்டும் அதிக தொகுதிகளை கேட்டு வாங்கியிருந்தது. ஆனால், இப்போது வரை வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.
ஊருக்கு முன்னாடி தொகுதிகளை கேட்டு வாங்கிய காங்கிரஸ், இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், வேட்பாளரை அறிமுகப்படுத்தாமல் கை சின்னத்திற்கு கூட்டணி தலைவர்கள் ஓட்டு கேட்டு வருகின்றனர்.

மௌனம் பேசுமா?
ஒவ்வொரு தேர்தல்களிலும் காங்கிரஸ் ஏழரையை கூட்டுவது வழக்கமான ஒன்றுதான். கடந்த தேர்தலில் அப்போதை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்ணீர் வடித்திருந்தார். கூட்டணி கட்சி தலைவர் ஒருவர் கண்ணீரை வடிப்பதை எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. ஆனால், இந்த முறை இப்படியான சீன் ஏதும் நடக்கவில்லை. கொஞ்சம் இழுபறி இருந்தது. இருப்பினும் 28 தொகுதிகளை காங்கிரஸ் வாரி சுருட்டி சென்றுவிட்டது. இருப்பினும், இப்போது வரை வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருப்பதுதான் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸின் நிலைமை
காங்கிரஸுக்கு அப்புறம் தொகுதிகளை வாங்கிய விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கூட தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இன்னும் கூட்டணியில் இருக்கும் சின்ன சின்ன கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆனால், காங்கிரஸ் இன்னும் கிணற்றில் போட்ட கல்லு போல மௌனமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திக்கின்றன.
வேட்பாளர் இல்லாமல் குழம்பும் நிர்வாகிகள்
முன்னதாக கட்சியின் தேசிய தலைமைக்கு வேட்பாளர் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைமை வழங்கியிருந்ததாகவும், ஆனால் அது ஒரு சார்பாக இருப்பதாக எதிர்ப்புகள் எழுந்ததால், தேசிய தலைமை அந்த பட்டியலை புறக்கணித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்த தொகுதி காங்கிரஸுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், வேட்பாளர் அறிவிக்காததால் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு, வேட்பாளர் இல்லாமல் பிரச்சாரம் செய்திருந்தார்.
ராகுல் காந்தி உறுதி
மற்ற தொகுதிகளிலும் இதே நிலைமைதான். காங்கிரஸ் மாநில தலைமை பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. ஆனால், வேட்பாளர்கள் இல்லாதால், வெறும் கை சின்னத்திற்கு மட்டும் வாக்கு கேட்டு வருகின்றனர். வேட்பாளர் பட்டியல் எப்போதுதான் வெளியாகும் என்று கேள்வி எழுந்த நிலையில், இன்று இரவு பட்டியல் வெளியாக இருப்பதாக ராகுல் காந்தி உறுதியளித்ததாக ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
-
சென்னையில் இருந்து புறப்பட்ட விஜய்.. திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
ஒற்றை இலக்க பாஜக.. கேரளாவில் அடித்து தூக்கும் காங்.,. அப்போ கம்யூனிஸ்ட்? புதிய கருத்து கணிப்பு -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
1000 சவரன் தங்க நகை, மகளுக்கு கடன்! விஜய்யின் சொத்து பத்திரத்தில் முரண்பாடு? திமுக புள்ளி கூறுவதென்ன -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம் -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications