“நாங்க கேட்டதை கொடுக்கணும்”.. சூசகமாக கேட்ட செல்வப்பெருந்தகை.. நோட் செய்த முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன் மேடையை பகிர்ந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டணியில் சீட் தொடர்பாக சூசகமாகப் பேசினார். "கேட்டதையும், கேட்காததையும் கொடுக்கும் முதல்வர் நாங்கள் கேட்டதையும் கொடுக்க வேண்டும்" எனப் பேசியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அருகில் அமர்ந்திருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, 5 நிமிடத்திற்கு மேலாக ஸ்டாலினுடன் மேடையிலேயே பேசிக் கொண்டிருந்தார். மேடையில் வேறு தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது முதல்வர் ஸ்டாலினுடன் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தார் செல்வப்பெருந்தகை.

Congress Selvaperunthagai Signals Seat-Sharing Expectations in DMK Alliance

சென்னையில் கூட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் இளைஞர் அணி செயலாளர் சூரிய மூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

செல்வப்பெருந்தகை பேச்சு

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், "நூறு ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய கட்சி. அதற்கு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். காங்கிரஸ் கம்யூனிஸ்ட் இணைந்து சுதந்திரம் பெற்று தந்தபோது எப்படி செயல்பட்டோம் என இந்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும். காங்கிரஸ் கம்யூனிஸ்ட் இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்பட்டு நாட்டுக்குச் சுதந்தரத்தைப் பெற்று தந்தனர்.

தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து காத்துள்ளது. எப்படியாவது இந்த கூட்டணியை பிரிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. தமிழகத்தின் உரிமையை எங்கேயும் விட்டுக் கொடுக்காதவர்கள் தான் இந்த கூட்டணியில் உள்ளவர்கள். தேசத்தின் மீதும், இந்த மண் மீதும் அக்கறை உள்ளவர்கள். பிரித்தாளும் சூழ்ச்சி எங்களிடம் நடக்காது.

நாங்கள் கேட்டதையும் கொடுக்கவேண்டும்

கேட்டதையும் கொடுப்பவர் கேட்காததையும் கொடுப்பவர் முதல்வர். தமிழக மக்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும் முதல்வராக உள்ளார். எதை கேட்டாலும் கொடுக்கும் நீங்கள் தான் அடுத்த முறையும் முதல்வராக வருவீர்கள். அப்போதும் நாங்கள் கேட்டதை எல்லாம் நீங்கள் கொடுக்க வேண்டும்." எனப் பேசினார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுகள் இன்னும் தீவிரமடையவில்லை. எனினும், சீட் எண்ணிக்கை தொடர்பாக யூகங்கள் எழுந்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதிக சீட்கள் வேண்டும் என்றும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகிறது.

சீட் - சூசக பேச்சு?

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சிலர் திமுகவை சீண்டும் வகையில் பேசி வருகின்றனர். தவெக உடன் கூட்டணி அமைக்கும் விதமாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரது பேச்சுகள் உள்ளன. இது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில் தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, முதல்வர் ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டே, "கேட்டதையும் கொடுப்பவர் கேட்காததையும் கொடுப்பவர் முதல்வர். நாங்கள் கேட்டதைக் கொடுக்க வேண்டும்" எனப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+