கருணாநிதி தலையை வெட்ட சொன்னவர்கள் மீது ஒரு வழக்கும் பாயலையே.. காங். எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கேள்வி
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலையை வெட்டச் சொன்னவர்கள் மீது எந்த வழக்கும் பாயவில்லை. அப்படியிருக்கும் போது விடுதலை சிகப்பு கற்பனையாக பேசி கவிதை வெளியிட்டதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ பெருந்தகை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை அபிராமபுரம் ராஜரத்தினம் அரங்கில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஒரு விழா நடந்தது. இந்த விழாவில் இந்து கடவுள்களான சீதா, ராமர், ஹனுமனை இழிவுப்படுத்தும் வகையில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநரும் கவிஞருமான விடுதலை சிகப்பி பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விடுதலை சிகப்பி மீது பாஜக மாநில துணைத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரிடம் புகார் அளித்திருப்பதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் பாரத் இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாவட்ட நிர்வாகியும் விடுதலை சிகப்பி மீது புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை ட்விட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் அரங்கில் அபிராமபுரம் முத்தமிழ் பேரவை நிகழ்ச்சியில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதாக ப.விடுதலை சிகப்பி மீது பாஜக 'நாராயணன்' சொல்லி சென்னை அபிராமபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டிருந்தேன்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலையை வெட்டச் சொன்னவர்கள் மீது எந்த வழக்கும் பாயாத நிலையில் ப.விடுதலை சிகப்பி அவர்கள் கற்பனையாக பேசி கவிதை வெளியிட்டதற்காக அவரின் மேல் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருப்பது பேச்சுரிமையை நசுக்கும் செயலாகப் கருதுகிறேன். அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன். அபி"ராம"புரம் காவல்நிலையம் பெயரில் 'ராமர்' இருப்பதால் உடனே வழக்கா? இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

அது போல் விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவை கண்டித்து இயக்குநர் பா ரஞ்சித்தும் ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் தொடரும் மலக்குழி மரணங்களை கண்டித்து, அதன் தீவிரத்தை உணர்த்தும் விதமாக இந்து புராண கதாபாத்திரங்களை, டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் வழியில் நின்று , கடவுள்களாக இருந்தாலும் மலக்குழியில் இறங்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைவின் வழியாக கவிதை வாசித்தார் விடுதலை சிகப்பி. இதை புரித்துக் கொள்ளாத பட்டியலின விரோத கொள்கை கொண்ட பாஜக, இந்து பாசிச அமைப்புகளுக்கும், அவர்களின் அச்சுறுத்தலுக்கு பணிந்து வழக்கு தொடுத்திருக்கும் தமிழக காவல் துறைக்கும் கடும் கண்டனங்கள்! என தெரிவித்துள்ளார். இந்த பதிவை முதல்வர் அலுவலகம், ஸ்டாலின், தமிழக காவல் துறை உள்ளிட்ட ட்விட்டர் ஹேண்டில்களுக்கு டேக் செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது












Click it and Unblock the Notifications