125 சீட்டில் வலிமையா இருக்கோம்! ஸ்டாலினை சந்தித்தது காங். டீம்.. பரபரத்த மீட்.. இறுதியாகும் பங்கீடு?
சென்னை: முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கான இந்த ஆலோசனை கூட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைமையால் அமைக்கப்பட்ட ஐவர் கொண்ட குழு இந்த சந்திப்பை நடத்தி வருகிறது.
இந்த குழுவில் ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மூத்த தலைவர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை, சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

திமுக காங்கிரஸ் அறிமுக கூட்டம்
இச்சந்திப்பு ஒரு அறிமுகக் கூட்டம் மட்டுமே என்றும், தற்போது தொகுதிப் பங்கீடு குறித்த எந்த விவாதங்களும் நடைபெறாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் இன்று எத்தனை இடங்கள் வேண்டும் என்ற முதல் கட்ட விருப்பம் தெரிவிக்கப்படும்.
"இது எங்கள் முதல்வருடனான முதல் மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே," என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழ்நாட்டிற்கு அழைத்து வரவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அமைத்த இந்தக் குழுவுக்கு கிரிஷ் சோடங்கர் தலைமை தாங்குகிறார். திமுக கூட்டணியில் இருந்து விலகி TVK கட்சியுடன் காங்கிரஸ் இணையலாம் என்ற ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இக்குழுவின் நோக்கம். குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், திமுக உருவாக்கும் இதேபோன்ற குழுவுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடரும் என்று தெரிவித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைமை
காங்கிரஸ் கட்சி திமுகவிடம் பெரிய ரிப்போர்ட் ஒன்றை கொடுக்க உள்ளது. அந்த ரிப்போர்ட்டில் அவர்கள் எடுத்த சர்வே தொடர்பான விவரங்கள் இடம்பெற்று உள்ளன. அதில் 125 இடங்களில் நாங்கள் வலிமையாக இருக்கிறோம். அதில் 40 தொகுதிகள் எங்களுக்கு கண்டிப்பாக வேண்டும். கூடுதலாக 20 தொகுதிகள் தேவைப்படும் என்று காங்கிரஸ் இன்று முதல்வர் ஸ்டாலினிடம் கேட்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் பீகார் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அணுகுமுறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் திமுகவிடம் அதிக இடங்களை கேட்க வேண்டாம், திமுகவிடம் அனுசரித்து செல்லலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்க காங்கிரஸ் டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாம்.
பீகார் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அணுகுமுறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் திமுகவிடம் அதிக இடங்களை கேட்க வேண்டாம், திமுகவிடம் அனுசரித்து செல்லலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்க காங்கிரஸ் டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாம்.
பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மிகப்பெரிய சவுக்கடியாக உருவெடுத்து உள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி, அதன் கூட்டணிக் கட்சியான திமுகவிடம் அதிக இடங்களைப் பெற முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் பீகார் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு எதிரியாக் சென்றது.
பீகார் தேர்தல் - காங்கிரஸ் மோசம்
பீகார் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி (NDA) பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. பீகாரில் பாஜக - ஜேடியூ கூட்டணி 202 இடங்களில் வெற்றியை பெற்று உள்ளது. பாஜக 89 இடங்களிலும் , ஜேடியு 85 இடங்களிலும் வென்றுள்ளது.
பீகாரில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. அங்கு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
காங்கிரஸின் இந்த பலவீனமான செயல்பாடு அதன் கூட்டணிக் கட்சியான ஆர்ஜேடியின் வெற்றி வாய்ப்புகளையும் பாதித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காங்கிரஸின் குறைந்த வெற்றி விகிதம் கூட்டணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டைக் குறைத்துவிட்டதாக ஆர்ஜேடி தலைவர்கள் பலர் கருதுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு இது எதிராக மாறலாம். காங்கிரஸின் 40க்கும் மேற்பட்ட தொகுதிகள் கோரிக்கையைத் தமிழ்நாடு திமுக தலைமை ஏற்க மறுக்கலாம்.
திமுக உடன் இணக்கம்
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் திமுகவிடம் அதிக இடங்களை கேட்க வேண்டாம், திமுகவிடம் அனுசரித்து செல்லலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்க காங்கிரஸ் டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாம். காங்கிரசின் இந்த நிலைப்பாடு அவர்களுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருந்த விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஏமாற்றம் ஏற்பட்டு உள்ளது.
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க முயன்றது. ஆனால் காங்கிரஸ் டெல்லி தலைமை.. திமுகவுடன் இணக்கமாக செல்லுங்கள், கொடுக்கிற சீட்டை வாங்கிக்கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டு உள்ளதால்.. காங்கிரஸ் - தவெக கூட்டணி அமையாமலே போகும் சூழல் ஏற்பட்டு உள்ளது!
-
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு












Click it and Unblock the Notifications