லிஸ்டை நீட்டிய காங்கிரஸ் தலை.. ஸ்டாலின் சட்டென சொன்ன வார்த்தை.. அப்போ கூட்டணி? என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் அஜய் குமார் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளாராம்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு திமுகவிடம் 9 தொகுதிகளை தமிழ்நாட்டில் மட்டும் காங்கிரஸ் கேட்டுள்ளதாம் . புதுச்சேரியில் உள்ள ஒரு இடத்திலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால். மொத்தமாக 21 தொகுதிகளை கொடுத்து அதில் 9 ஐ கொடுக்கும்படி கேட்டுள்ளதாம். ஏற்கனவே வென்ற 9 தொகுதிகள் + 12 தொகுதிகள் என்று கூடுதலாக 21 தொகுதிகள் லிஸ்டை கொடுத்து அதில் 9 கேட்டுள்ளது. அதன்படி

 Congress wants to take 9 important seats from DMk: What did CM Stalin say ahead of talks on alliance?

ஏற்கனவே வென்ற தொகுதிகளான,

1. திருவள்ளூர் (SC)
2. கிருஷ்ணகிரி
3. ஆரணி
4. கரூர்
5. திருச்சிராப்பள்ளி
6. சிவகங்கை
7. தேனி
8. விருதுநகர்
9. கன்னியாகுமரி

அதேபோல் இப்போது திமுக மற்றும் திமுக கூட்டணி இருக்கும்,

1. திருநெல்வேலி
2. ராமநாதபுரம்
3. தென்காசி (SC)
4. திண்டுக்கல்
5. திருவண்ணாமலை
6. தஞ்சாவூர்
7. மயிலாடுதுறை
8. பெரம்பலூர்
9. கள்ளக்குறிச்சி
10. காஞ்சிபுரம் (SC)
11. தென் சென்னை
12. அரக்கோணம்

ஸ்டாலின் பதில் இல்லை: இதில் 9 தொகுதிகளை தரும்படி கேட்டுள்ளாராம் அஜய் குமார். ஆனால் ஸ்டாலினோ.. கூட்டணி பற்றி அதற்கான குழு முடிவு எடுக்கும். அவர்களிடம் ஆலோசனை நடத்துங்கள் என்று பட்டும் படமால் கூறி விட்டாராம்.

இதில் தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் இருக்கும் தொகுதி, தஞ்சாவூர் எஸ்எஸ் பழனிமாணிக்கம் இருக்கும் தொகுதி, கள்ளக்குறிச்சி பொன்முடி மகன் கவுதம் சிகாமணி இருக்கும் தொகுதி., ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி இருக்கும் தொகுதி ஆகும். இந்த 4 முக்கியமான தொகுதிகளை காங்கிரஸ் இந்த முறை குறி வைத்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.அதேபோல் பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர். பூத் கமிட்டி சார்பாக வாக்காளர்களை சந்திக்கும் பணிகளை திமுக தொடங்கிவிட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுடன்உடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய குழு அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய குழு அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

குழு உறுப்பினர்கள் : கே.என்.நேரு (கழக முதன்மைச் செயலாளர்), இ.பெரியசாமி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), க.பொன்முடி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), ஆ.ராசா எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) , எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

எத்தனை இடங்கள்: 2024 லோக்சபா தேர்தலுக்கு காங்கிரசுக்கு கடந்த முறை போல 10 இடங்களை கொடுக்காமல் 7 இடங்களுக்குள் சுருக்கும் முடிவில் திமுக உள்ளதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் சமீபத்தில் காங்கிரசின் தோல்வி.. திமுகவிற்கு கூட்டணி ரீதியாக அதிக பவரை கொடுத்துள்ளதாம்.

திமுக திட்டம் என்ன?: லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் இவர்களுக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த முறை 2 இடங்கள் வழங்கப்படாது. மாறாக ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் ராஜ்ய சபா இடங்களில் ஒன்று வழங்கப்படும். மற்றபடி 25 - 30 இடங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

5-7 இடங்கள்தான் கொடுப்போம்.. உங்கள் கட்சியில் தேர்வாக உள்ளவர்களின் லிஸ்டை தயார் செய்யுங்கள் என்று தகவலை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தெரிவிக்க உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+