“பல முறை நாட்டை ஆண்ட ஒரு தேசிய கட்சி இப்படி செய்யலாமா?” காங்கிரஸ் வெளியிட்ட படத்தால் சர்ச்சை!
சென்னை: பாஜக அரசை விமர்சித்து காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததை விமர்சித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவிடப்பட்டது. அந்த புகைப்படம் மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.84 ஆக இருந்தது. அதே நேரம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜனவரி 2021இல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.72 ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90 ஆக உள்ளது.

அமெரிக்க - இந்திய வர்த்தக விவாதங்களில் நிலவும் சுணக்கம், சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை ஆகியவை காரணமாக, உலக முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து தங்கள் பணத்தை எடுத்ததே இதற்குக் காரணம் என்றும், பெரும்பாலான முக்கிய நாணயங்களுக்கு எதிராக டாலர் தொடர்ந்து வலு பெற்றதால், முதலீட்டாளர்கள் டாலரை நோக்கித் திரும்பி உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக இறக்குமதி செலவுகள் அதிகரிக்கிறது. குறிப்பாக, கச்சா எண்ணெய், மின்னணு மற்றும் தொழில்துறை பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்கிறது. வெளிநாட்டுக் கடன்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு கடன் சுமை மேலும் கூடுகிறது. இதனால், சாமானிய மக்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
இந்நிலையில், ஆசியாவிலேயே மதிப்பு குறைந்த கரன்சியாக இந்திய ரூபாய் மாறி இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. "வலிமையற்ற ரூபாய் = வலிமையற்ற பிரதமர்" என்ற கேப்ஷனோடு, ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கம்.
அதில், ASIA என்பதில் 'A' என்பதற்குப் பதிலாக இந்திய ரூபாய் சின்னமும், அதனுடன் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் ஊன்றுகோல்களும் இடம்பெற்றுள்ளன. "வீக்" ஆன பிரதமர் என்பதை விமர்சிக்க, ஊன்றுகோலை பயன்படுத்தி இருப்பது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
Weak Rupee = Weak PM pic.twitter.com/teY0ViPDO4
— Congress (@INCIndia) January 14, 2026
காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். "இந்தியாவை பல முறை ஆட்சி செய்த ஒரு தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பதிவிடலாமா?" எனப் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications