சென்னை தேனாம்பேட்டையில் 2000 கோடி நிலம்.. எதிர்க்கும் காங்கிரஸ்.. ஹைகோர்ட்டில் பிரபல நிறுவனம் வழக்கு
சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கம் மற்றும் அதை ஒட்டியுள்ள பல ஏக்கர் நிலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளைக்கு சொந்தமானது ஆகும். இங்குள்ள 12 ஏக்கர் நிலத்தில் வணிக வளாகம் கட்ட தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது நிலத்தை வழங்க காங்கிரஸ் கமிட்டி விரும்பவில்லை என கூறப்படுகிறது. சுமார் 2000 கோடி மதிப்புள்ள நிலத்திற்காக தனியார் நிறுவனம் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னையில் அண்ணா சாலையில் காமராஜர் அரங்கம் அமைந்துள்ள தேனாம்பேட்டை இடமும் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாகும். இந்த இடத்தை அந்த காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் வாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு சென்னை தேனாம்பேட்டையில் 200 கிரவுண்ட் நிலம் காமராஜரால் வாங்கினார். இப்போது இந்த நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி ஆகும்.

இதில் 20 கிரவுண்ட் இடத்தில் காமராஜர் அரங்கம் கட்டப்பட்டு, மீதமுள்ள 180 கிரவுண்ட் இடம் மைதானமாக உள்ளது. இதில், 12 ஏக்கர் நிலத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு 1996-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1996-ம் ஆண்டு மே 28-ந் தேதி, ஸ்கைஹை கட்டுமான நிறுவனம் மற்றும் ஹீரல் கட்டுமான நிறுவனத்துடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை ஒப்பந்தம் செய்தது.
பின்னர், இந்த திட்டத்துக்கு 1999-ம் ஆண்டு ஜனவரி 18-ந் தேதி புதிய நிறுவனமான புளூ பேர்ல் கட்டுமான நிறுவனத்துடன் காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒப்பந்தம் செய்தனர். இந்தநிலையில், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த காங்கிரஸ் அறக்கட்டளை அறங்காவலர்கள் சி.சுப்பிரமணியம், பி.ராமச்சந்திரன், ஜி.கே.மூப்பனார் உள்ளிட்டோர் இறந்து விட்டனர். இதுவரை அங்கு கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படவில்லை. அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு அரசிடம் இருந்து முறையான அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
அதேநேரம் காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் மேற்கொண்டு எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாததால், இந்த மைதானம் பயன்படுத்தபடாமல் அப்படியே காலியிடமாகவே இருக்கிறது. கட்டுமானத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலம், தற்போது வாகன நிறுத்தம் உள்ளிட்டவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், கட்டுமான நிறுவனத்துக்கும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் பிரச்சினை எழுந்தது.
இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கட்சிக்கு சொந்தமான இடங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த காமராஜர் அரங்க மைதானத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டு அங்கு அண்மையில் பொதுக்கூட்டம் மிக பிரமாண்டமாக நடந்தது. பல ஆயிரம் பேர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். மேலும் தனியார் நிறுவனம் நிலத்தை கையக்கப்படுத்துவதை தடுக்க சுவர் எழுப்பப்பட்டது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் புளூ பேர்ல் கட்டுமான நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில் கூறுகையில், "கட்டுமான பணிக்காக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இன்னும் அமலில்தான் உள்ளது. இதற்காக பல கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் அடிப்படையில், தேனாம்பேட்டையில் உள்ள 12 ஏக்கர் நிலம் எங்கள் நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளதால், இந்த நிலத்தை பயன்படுத்தவும், உள்ளே, வெளியே தடையில்லாமல் செல்லவும் எங்களுக்கு உரிமை உள்ளது. இதில் தலையிட தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.மாலா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை அறங்காவலர்கள் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன்" என்று கூறி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற மே 15-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications