"டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு".. 3 மசோதாக்களின் தோல்விக்கு பின் ஸ்டாலின் போட்ட போட்டோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை என 3 மசோதாக்களும் எதிர்க்கட்சிகளால் இன்று லோக்சபாவில் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ''டெல்லியை வீழ்த்திய தமிழ்நாடு'' என்ற வார்த்தைகளுடன் பதிவிட்டுள்ள போட்டோ அதிக கவனம் பெற்றுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2026, மாநிலங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 (Delimitation Bill 2026),ல் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026 உள்ளிட்டவை நேற்று நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.

constitution-bill-tamil-nadu-defeats-delhi-mk-stalin-post-on-his-x

மகளிர் இடஒதுக்கீடுக்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுடன் தொகுதி மறுவரையறைக்கான 2 மசோதாக்களும் இணைத்து தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்கள் மீதான விவாதம் நேற்று தொடங்கி இன்று வரை நடந்தது. இதில் திமுக மகளிர் இடஒதுக்கீட்டு சட்டதிருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் தொகுதி மறுவரையறை மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

3 மசோதாக்களும் தோல்வி

மேலும் இது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா என்பதால் லோக்சபாவில் 3ல் 2 பங்கு எம்பிக்களின் ஆதரவு வேண்டும். பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இதனால் எதிர்க்கட்சி எம்பிக்களின் ஆதரவு வேண்டும். அந்த வகையில் இன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பில் 278 பேர் ஆதரவாகவும், 211 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை என 3 மசோதாக்களும் எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது.

ஸ்டாலின் போட்ட பதிவு

இந்த மசோதாக்கள் தோற்கடிக்கப்பட்ட உடன் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அதுபற்றி முக்கிய பதிவை செய்துள்ளார். தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் நேற்று அதன் நகலை தீயிட்டு எரித்தார். இந்த போட்டோவை அவர் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டு, ''டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்கு துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்'' என்று கூறியுள்ளார்.

இதன்மூலம், ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவை ஒருசேர வீழ்த்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மசோதாக்களை பிரித்து இருக்கலாம்

மேலும் அடுத்த பதிவில், ''மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைப் பொறுத்தவரையில், என்ன நடந்தது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம், 2023"-ஐ மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையுமின்றி நிறைவேற்ற முடியாது என்பதை உறுதிசெய்யவே, மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டினார்கள்.

மகளிர் இடஒதுக்கீடு இப்போதே உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. உள்ளாட்சிகளில் மகளிர் இடஒதுக்கீட்டை முன்னோடியாகச் செயல்படுத்தியது தமிழ்நாடுதான். எங்களுடைய கவலை என்பது, தென்மாநிலங்களைப் பாதிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா இத்துடன் உள்நோக்கத்துடன் இணைக்கப்பட்டதுதான். மறுவரையறை என்பது தென்மாநிலங்கள் பாதிப்படையாத வகையில் கவனத்தோடு செய்யப்பட வேண்டியது. அதனால்தான், அனைவரோடும் கலந்து பேசி, கருத்தொற்றுமையுடன் இதனைச் செய்யக் கோரினோம்.

குறைந்தபட்சம், தொகுதி மறுவரையறை மசோதாவையும் மகளிர் இடஒதுக்கீட்டையும் பிரித்திருக்கலாம். ஆனால், பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு அதனைச் செய்யவில்லை. இதேநேரத்தில், அவர்கள் மாநிலங்களுடன் தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசித்திருக்கலாம். ஆனால், அதனையும் செய்யவில்லை. நாம் தெரிவித்த கவலைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம். அதனையும் செய்யவில்லை.

இது நீதியல்ல; இது உண்மையான நோக்கமல்ல; இது வெறும் காட்சிப்பிழை! இதனைத் தமிழ்நாட்டுப் பெண்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
இந்தியப் பெண்கள் வாக்கு வங்கி அல்ல. அவர்களும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். உண்மை எளிமையானது: பா.ஜ.க. நினைத்திருந்தால் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால், அவர்கள் வழங்கக் கூடாது என முடிவெடுத்துவிட்டனர்'' என சீண்டி உள்ளார்.

தலைவர்களுக்கு நன்றி

அதேபோல் இன்னொரு பதிவில் 'இந்தியா' கூட்டணியின் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அதில், ''INDIA கூட்டணியின் தலைவர்களுக்குப் பெரும் நன்றி! எவ்வித கலந்தாலோசனையோ அல்லது ஒருமித்த கருத்தோ இன்றி, பாஜக அவசர அவசரமாக நிறைவேற்ற முயன்ற தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எனது சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

சோனியா காந்தி, கார்கே, பினராயி விஜயன், டி ராஜா, ரேவந்த் அனுமுலா, சித்தராமையா, மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத்பவார் லாலு பிரசாத் யாதவ், ஹேமந்த் சோரன், உமர் அப்துல்லா, அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக் உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

வடக்கு, தெற்கு என்று நம்மை பிரித்து, நம்மை பலவீனப்படுத்தித் தோற்கடிக்கவும், தங்கள் சுயலாபத்திற்காக இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மாற்றியமைக்கவும் அவர்கள் முயன்றனர். ஆனால் 'இந்தியா' கூட்டணி ஒன்றுபட்டு சதியை முறியடித்துள்ளது. இது வெறும் தொடக்கம் மட்டும் தான். வரும் நாட்களில் பாஜக சந்திக்கவிருக்கும் அடிகள் இன்னும் தீர்க்கமானதாக இருக்க வேண்டும். அதற்கு, நாம் ஒரே எதிர்க்கட்சியாகத் தொடர்ந்து ஒற்றுமையுடன் நிற்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+