TASMAC: பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்.. வேதனையடைந்த சென்னை நபர்.. நுகர்வோர் தீர்ப்பாயம் போட்ட உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூல் செய்த விற்பனையாளருக்கு நுகர்வோர் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக கேட்டதால் மன வேதனை அடைந்ததாக செம்பியம் பகுதியை சேர்ந்த தேவராஜன் என்பவர் இழப்பீடு கேட்டு நுகர்வோர் தீர்ப்பாயத்தை நாடியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாயம் தேவராஜனுக்கு டாஸ்மாக் விற்பனையாளர் ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், 2 மாதத்திற்குள் வழங்காவிடில் ஆண்டிற்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

TASMAC chennai Consumer Court

டாஸ்மாக் மதுபான விற்பனை

தமிழகத்தில் டாஸ்மாக் மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மூலம் மட்டுமே தமிழக அரசுக்கு அதிகளவிலான வருமானம் வருகிறது என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது, தமிழக டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல் செய்யப்படுவதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து குடிமகன்கள் இது தொடர்பாக புகார்கள் வைத்து வந்த நிலையில், தமிழக அரசு ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதியை கொண்டு வந்தது. இதனால் முறைகேடுகள் தடுக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் அப்படியும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூல் செய்யப்படுவதாக புகார்கள் தெரிவித்து வருகிறார்கள்.

பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய்

இந்த நிலையில் தான், சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் என்பவர், மாதவரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் 240 ரூபாய் மதிப்பு கொண்ட மதுபானம் வாங்கியிருக்கிறார். கடந்த மார்ச் மாதம் அவர் இந்த மதுபானத்தை வாங்கி இருக்கிறார். அப்போது மது பான விற்பனையாளர் 250 ரூபாய் கேட்டு இருக்கிறார்.

இதற்கு பாட்டிலில் 240 ரூபாய்தானே போட்டிருக்கிறது.. நீங்கள் ஏன் கூடுதலாக 10 ரூபாய் கேட்கிறீர்கள் என கேட்டிருக்கிறார். இதற்கு மதுபான விற்பனையாளர் எந்த ஒரு பதிலும் கூறாமல் ரூ.250 வாங்கி இருக்கிறார். இதனால் தேவராஜன் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளார்.

நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவு

இதனால் தேவராஜன் நுகர்வோர் தீர்ப்பாயத்தை நாட முடிவு செய்தார். அதன்படி, தன்னிடம் இருந்து டாஸ்மாக் மது பான விற்பனையாளர் பாட்டிலுக்கு கூடுதலாக வசூலித்த 10 ரூபாயை திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூபாய் 1 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், மதுபான கடைகளில் கூடுதல் பணம் வசூலிப்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறை. எனவே மாதாவரம் டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தேவராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக 2 மாதங்களில் வழங்க வேண்டும். 2 மாதத்திற்குள் வழங்காவிட்டால், ஆண்டிற்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+