தொங்கிய உறுப்புகள்.. காருக்கு அடியில் போன உருவம்.. மகாராஷ்டிராவில் ஓடும் காரிலேயே பலமுறை அக்கிரமம்
சென்னை: காரில் இளம்பெண்களை கடத்துவதும், ஓடும் காரிலேயே பெண்களை பலாத்காரம் செய்வதும் இந்தியாவில் அதிகரித்தவாறே உள்ளது.. இது தொடர்பான புகார்களும் அதிகளவில் பதிவாகி, காவல்துறையின் விசாரணைகள் நடக்கின்றன. கடந்த 3 மாதங்களில் மட்டும் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது கவலையை தந்து வருகின்றன.. அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவரும் போலீசில் புகார் தந்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
2 வருடங்களுக்கு முன்பு டெல்லியில் அஞ்சலி சிங் என்பவருக்கு நடந்த கொடுமையை எளிதில் மறக்க முடியாது.. 20 வயதான அந்த பெண், கடந்த ஜனவரி 1ம் தேதி அதிகாலையில் ஸ்கூட்டியில் சென்றபோது, கார் மோதி விபத்துக்குள்ளானார்.. காரின் அடியில் சிக்கிக்கொண்ட அஞ்சலி 13 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு, உடம்பெல்லாம் சிதைந்து போய் உயிரிழந்தார்.

தொங்கிய உறுப்புகள்
ஆனால், தன்னுடைய மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சலியின் தாயார் சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.. இதையடுத்து நடந்த போஸ்ட் மார்ட்டத்தில், அவரது அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை, எனவே பாலியல் துன்புறுத்தலுக்கு அவர் ஆளாக்கப்படவில்லை என்பது உறுதியானது.
ஆனால், இந்த விபத்தின் கொடூரம் மிகுந்த பரபரப்பை அப்போது ஏற்படுத்தியிருந்தது.. காருக்கு அடியில் அஞ்சலி சிக்கி இழுத்து செல்லப்பட்ட நிலையில், அதிலிருந்து ஒரு கை மட்டும் வெளியே தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. இந்த வீடியோ இணையத்திலும் வெளியாகிய பிறகுதான், போலீஸாரின் கண்களிலும் சிக்கி, விசாரணை நடந்தது நினைவிருக்கலாம்.
பியூட்டி பார்லர் பெண்
நேற்று முன்தினமும், பஞ்சாப் மாநிலத்தில் ஒரு கொடுமை நடந்தது.. மொகாலி ஜிராஜ்பூரில் , ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்க்கும் 16 வயது சிறுமி, சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து சண்டிகர்- அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மால் அருகே ஆட்டோவுக்காக காத்திருந்தார்.
அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றி கடத்தி சென்றிருக்கிறார்கள்.. பிறகு ஓடும் காரிலேயே மர்ம நபர்கள் சிறுமியை செய்துள்ளனர்.. மேலும், சண்டிகரில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்துக்கு அழைத்து சென்றும் பாலியல் பலாத்காரம் செய்து, இறுதியாக கடத்தப்பட்ட இடத்திலேயே அந்த சிறுமியை விட்டுச் சென்றனர்..
காருக்குள் இழுத்து சென்று
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்காத நிலையில், மகாராஷ்டிராவில் ஒரு பெண் பரபரப்பு புகார் தந்துள்ளார்.. புனே மாவட்டத்தில் லோனாவாலா என்ற பகுதியில், 23 வயது பெண், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்..
அப்போது ஒரு கார் அவரது அருகில் வந்து நின்றதுடன், அந்த காரிலிருந்து இறங்கிய ஒருவர், பெண்ணை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து சென்று தள்ளியிருக்கிறார்.. பிறகு, தனிமையான இடத்திற்கு அழைத்து சென்று, பலாத்காரம் செய்துள்ளார்.. அதாவது கார் நகர்ந்து கொண்டிருக்கும்போதே தன்னை தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, அந்த பெண் லோனாவாலா நகர போலீசில் தெரிவித்தார்..
துங்கார்லி பகுதியில் பல இடங்களுக்கு காரிலேயே அழைத்துச் சென்ற, தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைகளை செய்தார்களாம்.. பிறகு, சனிக்கிழமை அதிகாலை சாலையோரத்தில் தூக்கி வீசிவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
காருக்குள் 3 பேர்
காருக்குள் மொத்தம் 3 பேர் இருந்தார்களாம்.. அவர்கள் யாரென்று தனக்கு தெரியவில்லை என்றும், ஆனால், காரை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு, தன்னை தரதரவென இழுத்து சென்று கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கூறினார்.. இதையடுத்து ஓடும் காரிலேயே பலாத்காரம் என்றதால், இதன் விசாரணை உடனடியாக ஆரம்பமானது..
இறுதியில், காருக்குள் ஒரே ஒரு நபர் மட்டுமே இருந்துள்ளார் என்பதும், அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் துங்கார்லியை சேர்ந்த 35 வயது நபர் என்பதும் தெரியவந்துள்ளது.. பெண் ஏன் அப்படி சொன்னார்? அந்த நபர் யார்? என்ற விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications