Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் மக்களுக்காக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு.. ஒப்பந்ததாரருக்கு அபராதம்.. அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உரிய காலத்திற்குள் பணியை முடிக்காத ஒப்பந்ததாரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி 126-வது வார்டில் ரூ.118.53 கோடி மதிப்பீட்டில் 702 அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்திற்கு உரிய காலத்திற்குள் பணியை முடிக்காததால் அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி 126-வது வார்டில் ஆண்டிமான்ய தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.118.53 கோடி மதிப்பீட்டில் 702 அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்திற்கு, முன் புனையப்பட்ட கான்கிரீட் தொழில்நுட்பத்துடன் ஏ.பி.சி.டி. என 4 தொகுப்புகளாக ஒப்பந்தம் போடப்பட்டு 18 மாத ஒப்பந்த காலமாக 23.8.2024 அன்று திட்டப்பகுதியை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Chennai apartment

இதில் அடிப்படை சேவைகளான குடிநீர், கழிவுநீர், மின்சார வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என ஒப்பந்தத்தில் போடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் படி கடந்த 7 மாத காலத்தில் 45 சதவீத கட்டுமான பணி நிறைவடைந்து இருக்க வேண்டும். தொகுப்பு ஏ அடிக்கட்டு அளவிற்கு செங்கல் வேலை முடிந்துள்ளது. தொகுப்பு பி பைல் வேலையில் 437-ல் 372 முடிவடைந்துள்ளது. தொகுப்பு சி இன்னும் தொடங்கப்படவில்லை.

தற்போது வரை 15 சதவீதம் மட்டுமே பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள 30 சதவீத பணி பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால் குடியிருப்புதாரர்கள் காலி செய்து 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் குறித்த நேரத்தில் வீடு வழங்க முடியாத நிலையில் உள்ளது.

மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 17.3.2025 அன்று திட்டத்தை ஆய்வு செய்து உரிய காலத்திற்குள் குடியிருப்பினை குடியிருப்புதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். உரிய காலத்திற்குள் கட்டுமான பணியை முடிக்காத காரணத்தினால் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனரால் கட்டண அபராதமாக நாள் ஒன்றுக்கு ரூ.2,000 விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த காலத்தில் கட்டுமான பணியை எட்டும் வரை இந்த அபராத கட்டணம் தொடரும். எனவே பணியினை ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி 59-வது வார்டு பி.ஆர்.என். கார்டன் திட்டப்பகுதியில் ரூ.85 கோடி மதிப்பீட்டில் 503 அடுக்குமாடி குடியிருப்புகள் தூண் மற்றும் 9 தளங்களுடன் தங்கள் நிறுவனத்திடம் 18.12.2024 அன்று திட்டப்பகுதி ஒப்படைக்கப்பட்டது.தற்போது 20 சதவீத பணி முடிந்திருக்க வேண்டும். ஆனால் 11 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.

ஒப்பந்ததாரர் இதுவரை திட்டத்தின் முக்கிய கட்டங்களைக் கூட நிறைவேற்றவில்லை. இந்த தாமதம், உரிய நேரத்தில் நிறைவடையாமைக்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஒப்பந்த காலக்கட்டத்தை மீறி தாமதம் செய்ததற்காக ஒப்பந்ததாரருக்கு அறிவிப்பு கடிதம் அனுப்பி உள்ளது. உங்கள் நிறுவனத்தினால் ஏற்கனவே ஒப்பந்தத்தின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். தாமதம் தொடர்ந்தால் ஒப்பந்த விதிமுறைகளின்படி கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+