Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் நிகழ்ச்சியில் ‘திராவிட நல் திருநாடும்’ மிஸ்.. சண்டை செய்த முதல்வர் ஸ்டாலின்..பாஜக விளக்கம்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது 'திராவிட நல் திருநாடும்' என்ற வரி தவிர்த்து பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாஜக ஒரு புதிய விளக்கத்தை அளித்திருக்கிறது.

சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி சார்பில் இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

mk stalin rn ravi bjp

ஏற்கனவே இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் இது இந்தி திணிப்பு முயற்சி என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதில்,"சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இணைந்து 18-10-2024 அன்று நிறைவடையும் 'இந்தி மாத' நிறைவுவிழா நடைபெறுவது குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது ஒன்றிய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும்.

இந்திய அரசு செம்மொழியாக அங்கீரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தாம் பரிந்துரைப்பதாகவும் இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும்" என கூறியுள்ளார்.

இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி டிடி தொலைக்காட்சியில் இந்தி மாத நிறைவு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி பங்கேற்று பேசிய போது,"இந்தி மொழியை வைத்து 50 ஆண்டுகளாக மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கிடையே ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியவர்கள் "தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகளை விட்டுவிட்டு பாடினார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரை திருப்தி படுத்துவதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு 'திராவிட நல் திருநாடு' என்ற வார்த்தையை விட்டு விட்டு பாடியதாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.

இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்! திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!" என கூறியுள்ளார்.

மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்"தமிழ்நாட்டின் ஆளுநர் இன்று பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது திட்டமிட்டே தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. ஆளுநரை திருப்தி படுத்த டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு செய்தார்களா?

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அதைத் திருத்தி, தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியை வாசிக்காமல் விடுபட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய கீதத்திலும் 'திராவிட' என்ற வார்த்தை வருகிறதே? அதை தவிர்த்து விட்டு பாட முடியுமா? தேசிய கீதம் நாட்டிற்கு பெருமை என்றால், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டிற்கு பெருமை தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் அனைவரும் உணர வேண்டும்." என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திட்டமிட்டு திராவிடம் என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்ட குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றியிடம் பேசிய தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன்," தமிழ் தாய் வாழ்த்து பாட தெரியாதவர்களை வைத்து நிகழ்ச்சியில் பாட ஏற்பாடு செய்ததால் திராவிடம் என்ற வார்த்தை தெரியாமல் தவிர்க்கப்பட்டதாகவும், இதில் உள்நோக்கம் இல்லை" என விளக்கம் அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+