Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஆளுநர் பதவி என்பதே பாஜகவின் ஆறுதல் பரிசுதான்”- அலசி ஆராய்ந்த அரசியல் தலைவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டு பாஜக கட்சியைச் சேர்ந்த 3 பேர் இதுவரை ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டு தலைவர்களைத் தேடிப் பிடித்து ஆளுநர்களாக நியமிக்கிறது மத்திய பாஜக அரசு என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கருத்துச் சொல்கிறார்கள்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். ஆட்களைப் பார்த்து ஆளுநர் பதவியில் அமர்த்தி வருகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு என்று எதிர்க்கட்சியினர் ஆவேசம் கொள்கிறார்கள்.

ஆளுநர் பதவி என்பது நேரடி அரசியல் கலப்பு இல்லாத பதவி. ஆகவே அதில் துறை சார்ந்த நிபுணர்களை நியமிக்க வேண்டுமே ஒழிய, நேரடியாக நிர்வாகிகளை நியமிக்கக் கூடாது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையோ தமிழக மக்கள் எங்கள் திறமையை அங்கீகரிக்கவில்லை. ஆகவே மத்திய அரசு எங்கள் திறமையை மதித்து ஆளுநர் பதவியில் உட்காரவைத்து அழகு பார்த்துள்ளது என்ற கோணத்தில் தனது கருத்தைப் பதியவைத்துள்ளார்.

தமிழிசையை தமிழர்கள் மதிக்கவில்லையா?

தமிழிசையை தமிழர்கள் மதிக்கவில்லையா?

இதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சிகூட அக்கட்சியினை சார்ந்த மூத்த தலைவர்களை ஆளுநராக அமர்த்தி அழகு பார்த்துள்ளது. ஆனால், அவர்கள் அரசியல் வாழ்வையே விட்டு விலகி வாழ்ந்துவந்த அந்திமகாலத்தில்தான் அப்பதவி வழங்கப்பட்டது. நேரடியாகக் கட்சி உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு யாரும் ஆளுநர் ஆக அமரவில்லை என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆளுநர் நியமனத்தில் அரசியலை நேரடியாகக் கலந்துவருகிறது என்பதற்கான நேரடி சான்றுகள் நிறையவே உள்ளன. அது குறித்து சிலரது கருத்துகளைக் கேட்டோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, "ஆளுநர் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக மாறிக் கொண்டு வருகின்றன. ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். மையங்களாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

சி.பி.ராதாகிருஷ்ணனின் நியமனம் புதியதல்ல; ஏற்கெனவே இல.கணேசன் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல தமிழிசை செளந்தரராஜன் முன்பே நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைக்கு எந்த மாநிலத்தைப் பார்த்தாலும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றார்கள்" என்கிறார்

சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் "பல ஆளுநர்களை புதியதாக நியமித்திருக்கிறார்கள். சில ஆளுநர்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதில் இதுவரை தமிழ்நாட்டிலிருந்து 3 பேர் ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார்கள். மூன்று பேரும் பாஜக சேர்ந்தவர்கள் என நான் தனியே சொல்லத் தேவையில்லை என்கிறார்.

ஆளுநர் பதவி என்பது ஆறுதல் பரிசா?

ஆளுநர் பதவி என்பது ஆறுதல் பரிசா?

ஆளுநர் பதவி என்பது பாஜக தலைவர்களுக்கு ஆறுதல் பரிசு மாதிரி ஆகிவிட்டது. பாஜக தமிழ்நாட்டில் எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது. அந்தக் கட்சியை மக்கள் ஏற்கப்போவதில்லை. ஆகவே தமிழ்நாட்டில் அந்தக் கட்சியில் தலைமைத் தாங்கியவர்களுக்கு ஒரு ஆறுதல் பரிசு வழங்க வேண்டும் என்பதால் ஆளுநர் பதவியைக் கொடுக்கிறார்கள்.

நான் கேட்கிறேன், தமிழ்நாட்டில் பாஜகவில் இருப்பவர்களைத் தவிர ஆளுநர் பதவிக்கு வேறு யாருமே தகுதி உள்ளவர்கள் இல்லையா? எத்தனையோ பொருளாதார நிபுணர்கள் இருக்கிறார்கள். பிற துறைசார்ந்த வல்லுநர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைக்கக் கூடிய தலைசிறந்த ஆளுமைகள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு, பாஜகவைச் சேர்ந்தவர்களையே நியமித்தால் என்ன அர்த்தம்? அந்தக் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப் போவதில்லை. ஆகவே அந்தப் பதவியைக் கொடுக்கிறார்கள் என்பதுதானே அர்த்தம்? அது பாஜகவின் ஆறுதல் பரிசு என்றுதானே அர்த்தம்" என்கிறார்.

"ஆளுநர்களை உள்துறை அமைச்சகம் தேர்ந்தெடுத்து குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கிறது. அவர்தான் ஆளுநர்களை நியமிக்கிறார். எங்களைப் போன்றவர்களின் திறமையைத் தமிழ்நாட்டு மக்கள் அங்கீகரிக்கவில்லை. ஆனால், குடியரசுத் தலைவர் எங்களது திறமையைப் புரிந்துகொண்டுள்ளார். ஆகவேதான் ஆளுநராக எங்களை நியமிக்கிறார்.

தமிழக மக்கள், எங்கள் திறமையை அங்கீகரித்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்திருந்தால், மத்திய அரசு எங்களை மத்திய அமைச்சர்களாகப் பதவியில் அமர்த்திருக்கும். மக்கள்தான் எங்களை அங்கீகரிக்கவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.

கவர்னர் ட்ரெயிங் சென்டரா பாஜக?

கவர்னர் ட்ரெயிங் சென்டரா பாஜக?

தமிழிசையின் கருத்தை விமர்சிக்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "ராஜ்பவன் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே. பரீட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா?" என்று விமர்சித்துள்ளார்.

இதில் கருத்து தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், "கவர்னர் ட்ரெய்னிங் கொடுக்கின்ற இடம்தான் பாஜக. அக்கா தமிழிசை தூத்துக்குடியில் நின்றார். அவர் டெப்பாசிட் வாங்கினாரா என்று கூட தெரியவில்லை. அவரை பாஜக ஆளுநராகப் பதவியில் அமர்த்துவிட்டது" எனத் தனது ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின் போது விமர்சித்துள்ளார்.

பாஜக நேரடியாகத் தனது கட்சித் தலைவர்களை மட்டும் நியமிக்கவில்லை. சில முன்னாள் நீதிபதிகளையும் நியமித்து வருகிறது. அதுவும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என சில விமர்சன குரல்கள் ஒலித்துவருகின்றன.

அது குறித்து பேசிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கோ. பாலச்சந்திரன், "அரசுக்கு ஆதரவாக சில தீர்ப்புகள் வந்தவுடனேயே நீதிபதிகள் சில உடனடியாக ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் அதன் பின்புலம் குறித்து மக்களுக்கு ஒரு சந்தேகம் உருவாகி உள்ளது உண்மை.

உச்சநீதிமன்ற நீதிபதிக்கு ஆளுநர் பதவியா?

உச்சநீதிமன்ற நீதிபதிக்கு ஆளுநர் பதவியா?

நீதியரசர் சதாசிவம் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தவர். அந்தப் பதவி ஏறக்குறைய குடியரசுத் தலைவருக்கு இணையான பதவி. ஏனென்றால், ஜனாதிபதிக்கே பதவிப்பிரமாண செய்து வைக்கக்கூடிய அதிகாரம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குத்தான் உள்ளது.

அவ்வளவு பெரிய பதவியிலிருந்தவர் ஆளுநர் பதவியை எப்படி ஏற்றுக் கொண்டார் என்றே தெரியவில்லை. ஆளுநர் பதவி என்பது மிகமிக குறைவான அந்தஸ்து கொண்ட பதவி. ஆனால் அவர் அதை ஏற்றுக் கொண்டார்?" என்கிறார்

எழுத்தாளர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணன், கூறுகையில் "ஆளுநர் தமிழிசையின் கருத்து பக்கா ஜனநாயக மக்கள் விரோத கருத்து. முதலில் இவர்கள் மக்களின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தீவிரமாக பாஜகவுக்காகக் கட்சி வேலை செய்துவருகிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல், சரி, இவரை கவர்னர் பதவியில் போடுங்கள். அங்கேயும் நம் ஆட்கள் வேண்டும் என பாஜக மேலிடம் முடிவு செய்கிறது.

தமிழ்நாட்டு ஆளுநர் ரவி பக்கா ஆர்.எஸ்.எஸ்.காரர். அவரை ஆளுநராகப் போட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் குடைச்சல் கொடுக்க வைக்கிறது ஒன்றிய அரசு. அதுதானே உண்மை.

ஆளுநர் ரவி, தமிழ்நாட்டு மக்களின் அரசியல் உரிமைக்கு எதிரான கருத்தையே தொடர்ந்து பேசி வருகிறார். இதைப்போலப் பல மாநில ஆளுநர்கள் செய்கிறார்கள். அதை இல்லை என்று மறுக்க முடியுமா?

இன்றைக்கு நாம் என்ன விவாதிக்க வேண்டும் என்றால் ஆளுநர் பதவி என்பது தேவையா? தேவை இல்லையா? என்பதைத்தான். ஒரு மாநிலத்திற்கு ஒருவரை ஆளுநராக நியமிக்கும் போது குறைந்தபட்சம் அம்மாநிலத்தின் முதலமைச்சரின் ஒப்புதலையாவது பெறவேண்டுமா? வேண்டாமா?

தமிழ்நாட்டு உரிமைக்காக நீங்கள் என்ன குரல் கொடுத்திருக்கிறீர்கள்? பிறகு தமிழ்நாட்டு மக்கள் உங்களை எப்படி ஆதரிப்பார்கள்? தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து அநீதி இழைத்து வரும் மத்திய பாஜகவின் அங்கம்தானே நீங்கள்?" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+