சர்ர்ன்னு ஏறிய சமையல் எண்ணெய் விலை.. 1 லிட்டர் எவ்ளோ பாருங்க.. அப்ப காரணம் இதானா? இல்லத்தரசிகள் கவலை
சென்னை: தீபாவளி பண்டிகை முடிந்தும்கூட, சமையல் எண்ணெய்களின் விலையில் மாற்றம் தென்படவில்லை.. இதனால், பல்வேறு சமையல் எண்ணெய்கள் தற்போது ஒரு லிட்டர் 150-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் விலை உயர்வானது, இல்லத்தரசிகளை பெரும் கவலைக்குள்ளாக்கி வருகிறது.
இந்தியாவில் சில உணவு பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.. இப்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியும் விதிக்கப்படுகின்றன. மத்திய அரசு விதித்து வரும் இந்த வரி பொருட்களுக்கு ஏற்ப வித்தியாசப்படும்... இப்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் சமையல் எண்ணெய்களும் அடங்கும்.

இறக்குமதி வரி: இந்திய சந்தைகளில் இவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சமையல் எண்ணெயின் தேவையில் 70 சதவீதம் இறக்குமதி மூலமாக தான் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்தில் உள்ளிட்ட நாடுகளிலிருந்துதான் நமக்கு அதிகளவில் பாமாயில் இறக்குமதியாகின்றன..
தற்போது எண்ணெயின் விலை அதிக அளவில் உயர்ந்து காணப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது..
தீபாவளி பண்டிகை: மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்திய காரணத்தினால், தீபாவளி பண்டிகை நேரத்தில் லிட்டருக்கு 20 ரூபாய் உயர்ந்தது... பிறகு தீபாவளி முடிந்ததுமே விலை குறைந்து விடும் என்று நம்பப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில், லிட்டருக்கு மேலும் 20 ரூபாய் எகிறியது.
இதன்காரணமாக, பல்வேறு சமையல் எண்ணெய்கள் தற்போது ஒரு லிட்டர் 150-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த 2 மாதத்தில் மட்டும் சமையல் எண்ணெய் லிட்டருக்கு 40 ரூபாய் வரை உயர்ந்திருப்பது, பொதுமக்களை கடும் அதிருப்திக்கும், அதிர்ச்சிக்கும் ஏற்படுத்தி உள்ளது.
என்ன காரணம்: இதுகுறித்து சேலம் மாவட்ட எண்ணெய் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சொல்லும்போது, "மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வு, மற்றும் சில நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர்கள், மலேசியாவிலிருந்து அதிக அளவில் சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்களை இந்தியா இறக்குமதி செய்வது உள்ளிட்ட காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.. இந்த விலை உயர்வு மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால், இப்போதைக்கு விலை குறைய வாய்ப்பில்லை" என்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications