coolie: செளபினை பாடி ஷேமிங் செஞ்சிட்டாரு ரஜினி.. டோப்பா இல்லாம நடிக்க முடியுமா? கேட்கிறார் ப்ளூ சட்டை மாறன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலையாள நடிகர் சௌபின் ஷாஹிரை பாராட்டி பேசியபோது, வழுக்கைத் தலையாக இருந்ததால், அவர் அந்த வேடத்திற்கு பொருந்துவாரா? என லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பியதாக பேசி இருந்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் பாடி ஷேமிங் செய்ததாக மலையாளத் திரையுலகில் விமர்சனம் எழுந்திருக்கும் நிலையில், சௌபின் ஷாஹிர் போல விக் இல்லாமல் உங்களால் நடிக்க முடியுமா என ரஜினிகாந்தை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார் பிரபல திரைப்பட விமர்சகர் ஆன ப்ளூ சட்டை மாறன்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படத்தில், ரஜினிகாந்த் உடன் நடிகர்கள் நாகார்ஜுனா, ஆமீர் கான், உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கமலஹாசனின் மகள் சுருதிஹாசன் படத்தில் முதன் முதலாக ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார்.

படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் டீசர், டைட்டில் கார்டு, மற்றும் பாடல்கள் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது குறிப்பாக மோனிகா பாடல் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதியான நாளை படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

coolie movie release

ரஜினிகாந்த் கூலி படம்

இந்த நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிக பிரம்மாண்டமாக டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்தியராஜ், ஆமீர்கான் உள்ளிட்ட பலர் இந்த வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த் பேச்சு

அப்போது பேசிய ரஜினிகாந்த்," இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படத்தில் முதலில் ஃபஹத் பாசிலை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். அவர் முன்பு லோகேஷுடன் இணைந்து பணியாற்றியவர். ஆனால் ஃபஹத் கிடைக்காததால் அந்த கேரக்டருக்கு வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டியிருந்தது. அப்போது செள்பின் என லோகேஷ் சொன்னார். "நான் லோகேஷிடம், 'சௌபின் யார்? அவர் எந்த படங்களில் நடித்துள்ளார்?' என்று கேட்டேன். அவர் மஞ்சுமல் பாய்ஸ் பற்றி குறிப்பிட்டார், அதில் சௌபின் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். எனக்கு இன்னும் சந்தேகங்கள் இருந்தன, அவர் வழுக்கையாக இருந்ததால் அவர் அந்த வேடத்திற்கு பொருந்துவாரா என்று கூட கேள்வி எழுப்பினேன்," என்று கூறினார்.

செளபின் ஷாகீர்

அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த செளபின் அதனை கைதட்டி வரவேற்றாலும் சிலர் ரஜினிகாந்தின் பேச்சை கண்டித்து வருகின்றனர். செளபினி வழுக்கை தலையை வைத்து பாடி ஷேமிங் செய்ததாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் தனது நண்பரின் மகளான ஸ்ருதிஹாசனை கவர்ச்சி நடிகை என குறிப்பிட்டு பேசியதையும் வைத்து ரஜினிக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தது.

பாடி ஷேமிங்

இந்த நிலையில் சௌபின் விக் இல்லாமல் நடிக்கிறார்.. உங்களால் நடிக்க முடியுமா என ரஜினிகாந்த்தை நோக்கி கேள்வி எழுப்பி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," எனக்கு வில்லன் சோபின் சஹீர் என லோகேஷ் கூறினார். என்னடா இது.. வழுக்கை தலையாக இருக்கிறாரே.. யார் இவர்? எனக்கெப்படி வில்லனாக நடிப்பார் என்று யோசித்தேன். Manjummel Boys படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் என கூறியதால் ஓகே சொன்னேன் - கூலி ட்ரைலர் வெளியீட்டில் தலீவர் பேசியது.

ஃபஹத் ஃபாசில்

75 வயதிலும் நீங்கள் டோப்பா வைத்துதான் நடிக்கிறீர்கள். ஆனால் முடியை நம்பி சோபின் நடிப்பதில்லை. தனது நடிப்பை மட்டுமே நம்புகிறார். வயது 41. Iyobinte Pusthagam, Sudani from Nigeria, Kumbalangi Nights போன்ற படங்களை பார்த்திருந்தால்.. இவர் யாரென்று தெரிந்திருக்கும். ஃபஹத் ஃபாசில் நடிக்க வந்தபோது அவருக்கு தலைமுடி குறைவாக இருந்ததை பலர் கிண்டல் செய்தனர்.

ப்ளூ சட்டை மாறன்

செஞ்சிட்டு போங்க. நடிப்புல நான் யாருன்னு காட்டறேன் என சவால் விட்டு இன்றுவரை விக் வைக்காமல் நடித்து இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். வயது 43. உங்களுக்கு தில் இருந்தால் டோப்பா இல்லாமல் நடியுங்கள் ரஜினி. மற்றவர்களை குறைத்து மதிப்பிட‌ வேண்டாம்." என கூறியுள்ளார். அவரது இந்த பதிவிக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+