கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான்
சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளில் விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.. குறிப்பாக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் வைத்துள்ள நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது பொங்கலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகரித்துள்ளதாக செய்திகள் இன்று வெளியாகி உள்ளன!!
வழக்கமாக அரசு ஒரு தள்ளுபடி அறிவிப்பை வெளியிடும்போது, முதலில் அதற்கான தகுதி வரம்புகளை நிர்ணயம் செய்யும்.. கடந்த கால நடைமுறைகளை வைத்துப் பார்த்தால், கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் அல்லது அதற்குக் குறைவான எடை கொண்ட தங்க நகைகளை அடகு வைத்துப் பெற்ற கடன்கள் மட்டுமே தள்ளுபடிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன..

கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி
இதற்காக ஒரு தனி நபர் அல்லது ஒரு குடும்பம் பெற்ற மொத்தக் கடனின் அளவு கணக்கிடப்படும்.. தள்ளுபடி அறிவிப்பு வெளியானதும், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஒவ்வொரு வங்கியிலும் உள்ள கடன் கணக்குகளை ஆய்வு செய்வார்கள்..
இதில் பயிர்க் கடன் தள்ளுபடி சலுகை ஏற்கனவே பெற்றவர்களா, அரசு ஊழியர்களா அல்லது வருமான வரி செலுத்துபவர்களா போன்ற விவரங்கள் சரிபார்க்கப்படும்.. இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்ட தகுதியான பயனாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களின் கடன் அசல் மற்றும் வட்டித் தொகை முழுமையாக ரத்து செய்யப்படும்..
இதற்கான தொகையை அரசே வங்கிக்கு செலுத்திவிடும் என்பதால், கடனாளிகள் தங்கள் நகைகளை எவ்விதக் கட்டணமுமின்றித் திரும்பப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும்..
பொங்கலூர் விவசாயிகள்
இப்போது பொங்கலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த எதிர்பார்ப்பு காட்டுத்தீயாக பரவி வருகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது ஒவ்வொரு முறையும் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்கள் மற்றும் கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன..
விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் பயிர் கடன் மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பு, நகைக்கடன் மற்றும் தோட்டப் பராமரிப்பு எனப் பல்வேறு தேவைகளுக்காக வங்கிகளை நாடியுள்ளனர்.. கடந்த காலங்களில் நிலவிய வறட்சி மற்றும் பொருளாதார சூழல் காரணமாக இந்தப் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட வரலாறுகள் உள்ளன.. அதேபோன்றதொரு அறிவிப்பு இந்த முறையும் வெளியாகும் என்று விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக கால்நடை வளர்ப்பு மற்றும் தோட்டப் பராமரிப்புக்காகக் கடன் வாங்கியுள்ள சிறு குறு விவசாயிகள், தேர்தல் அறிக்கையில் தங்களுக்குச் சாதகமான அம்சங்கள் இடம்பெறுமா என்று உற்று நோக்குகின்றனர்..
மாஸ்டர் பிளான் அரசியல் கட்சிகள்
அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்காக இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டாலும், அது கடனில் தவிக்கும் விவசாயிகளுக்கு ஒரு தற்காலிக நிம்மதியைத் தரும் என்பதால்தான் இந்த ஆர்வம் அதிகரித்தபடியே உள்ளது.
இதனால் நகைக் கடன் தள்ளுபடி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளையும், அதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் தேர்தல் சமயத்தில் கட்சிகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இத்தகைய கடன் தள்ளுபடி திட்டங்கள் மக்களின் பொருளாதாரச சுமையைக் குறைக்கும் ஒரு முக்கிய ஆயுதமாகத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன..!!!












Click it and Unblock the Notifications