கூட்டுறவு சங்க பயிர் கடன் ஒரே நாளில் கணக்கில்! பயிர்க்கடனுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் யாவை?
சென்னை: நம்முடைய நாட்டை பொறுத்தவரை விவசாயம்தான் முதுகெலும்பு.. அந்தவகையில் விவசாயிகளின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் மத்திய அரசு வழங்கியபடியே உள்ளது.. அந்தவகையில் தமிழகத்திலும் விவசாயிகளின் பணத்தேவைக்காக தமிழக அரசு பல வசதிகளை செய்து தந்துள்ளது.. அதில் ஒன்றுதான் கூட்டுறவு சங்கம் வழங்கும் பயிர் கடன் வசதி.. இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
விவசாயி பயிர் செய்கைக்கு தேவையான பணத்தை நேரம் தவறாமல் பெற உதவும் ஒரு எளிய நிதி வசதிதான், இந்த கூட்டுறவு பயிர் காப்பீடு கடனாகும்.. அந்தந்த ஊரிலேயே உள்ள முதன்மை கூட்டுறவு விவசாயக் கடன் சங்கம் மூலம் இந்த பணம் வழங்கப்படுகிறது.. ஆனால், சங்கத்துக்கு உறுப்பினராக இருந்தால், இன்னும் எளிதாக, குறைந்த வட்டியில் இந்த கடனை பெறலாம்.

பயிர்க்கடன் அத்தியாவசியம்
இங்கு சாதாரண வங்கிகளுடன் ஒப்பிடும்போது வட்டி குறைவு... அரசு தரும் வட்டி சலுகையால் பல இடங்களில் மிகவும் குறைந்த வட்டி மட்டுமே விவசாயி செலுத்த வேண்டும்... சில நேரங்களில் சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்தினால் முழு வட்டியும் கழித்துவிடக்கூடும்..
திடீர் மழை, வறட்சி, பூச்சி தொல்லை போன்ற நேரங்களில் பணம் இல்லாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், விவசாயிகளுக்கு நஷ்டம் வராமல் இருப்பதற்காகவும் இந்த கடன் வழங்கப்படுகிறது..
பயிர் விதைப்பு முதல் அறுவடை வரை, விதை வாங்குவது, உரம் வாங்குவது, பூச்சிமருந்து செலவு, கூலி தொழிலாளர்களுக்கு சம்பளம், தண்ணீர் செலவு போன்றவற்றுக்கு இந்த கடன் மிகவும் உதவியாக இருக்கும். மேலும், கூட்டுறவு சங்கத்தின் மூலம் உரம், விதை போன்றவற்றை சலுகை விலையில் பெறவும் முடியும்..
பயிர் கடன் பெற ஆவணங்கள்
அந்தவகையில், கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் பயிர் கடன், விவசாயிகளின் தினசரி செலவுகளுக்கு நேரத்தில் உதவுகின்ற ஒரு முக்கிய திட்டமாக உள்ளது.
தமிழகத்தில் உள்ள 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வழியாக இந்தப் பயிர் கடன் இப்போது வழங்கப்பட்டு வருகிறது.. இந்த கடனை பெறுவதற்கு பெரிய பெரிய ஆவணங்கள், அடமானங்கள் படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நிலம் சார்ந்த அடிப்படை ஆவணங்கள் இருந்தாலே போதும். சிறு நிலம் கொண்ட விவசாயிகளும் இதை எளிதில் பெற முடியும்.
உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த அன்றே, விவசாயிகள் வங்கி கணக்கில் கடன் தொகை திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்..
இதன் பலன்கள் விவசாயிகளுக்கு அதிகரித்திருப்பதை அடுத்து,, இந்த திட்டத்தை அடுத்த 15 நாட்களில் தமிழகம் முழுதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. .
பயிர் கடனுக்கு தேவையான ஆவணங்கள்
பயிர் கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், 'இ-சேவை' மையங்களை அணுகலாம். விண்ணப்பிக்க வேண்டுமானால் சில சான்றிதழ்கள் கட்டாயம் தேவைப்படும்.
குறிப்பாக, உறுப்பினர் அட்டை அல்லது உறுப்பினர் எண், சேமிப்பு கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, பயிர் செய்ய உள்ள நிலத்தின் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்கள் தேவைப்படுகின்றன.
நிலம் குத்தகை என்றால் அதற்கான ஒப்பந்தமும் அவசியம். இ-சேவை தளத்தில் கூட்டுறவு துறையைத் தேர்வு செய்து, உறுப்பினர் எண்ணை பதிவு செய்தால் தேவையான விவரங்கள் கிடைக்கும்.. இதற்கு பிறகு ஆதார் உள்ளிட்ட தகவல்களை நிரப்பி ஆன்லைனிலேயே கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications