ரயில் பயணிகளுக்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்திய "2023.." கோரமண்டல் எக்ஸ்பிரஸ் டூ மதுரை ரயில் விபத்து வரை
சென்னை: 2023 ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்க தயராகிக் கொண்டு இருக்கும் நிலையில் இந்த ஆண்டில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில், இந்தியாவில் ரயில் பயணிகளுக்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்திய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து உள்பட மேஜர் ரயில் விபத்துக்களை பற்றி பார்க்கலாம்.
இந்தியாவில் ரயிலுக்கும் மக்களுக்கும் எப்போதும் ஒரு பிணைப்பு உண்டு. நடுத்தர வசதி கொண்ட மக்கள் அதிகம் வாழும் மக்களை கொண்ட இந்தியாவில் மக்கள் தங்கள் பயணத்திற்கு அதிகம் ரயில்களைத்தான் சார்ந்து இருக்கிறார்கள். மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டும் என்றாலும் சரி... மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும் என்றாலும் சரி... முதலில் ரயில் இருக்கிறதா... ரயிலில் டிக்கெட் இருக்கிறதா என்றுதான் பயணிகள் பார்ப்பார்கள்.

ரயிலில் டிக்கெட் கிடைக்காத பட்சத்தில்தான் பேருந்துகளில் பயணிப்பதை பற்றி யோசிப்பார்கள். இந்தியாவில் தினமும் ஓடும் ஆயிரக்கணான ரயில்களில் சுமார் 24 மில்லியன் (கிட்டதட்ட 2.5 கோடி) பயணிகள் பயணம் செய்கிறார்கள். இப்படி பயணிகளுடன் இரண்டறக் கலந்துள்ள இந்திய ரயில்வேக்கு நடப்பு ஆண்டு கொஞ்சம் போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும்..
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: ஆம் இந்த ஆண்டு மட்டும் நாட்டையே உலுக்கும் அளவுக்கு பல ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன. 2023 ஆம் ஆண்டுக்கு விடை கொடுக்க தயராகிவரும் நாம்.. இந்த ஆண்டில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற ரயில் விபத்துக்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்...
மேற்கு வங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி வரும் நூற்றுக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களை அன்றாடம் சுமந்து வரும் இந்த ரயில் கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பலசோர் மாவட்டம் பஹாநகா பஜார் பகுதியில் பயங்கர விபத்தில் சிக்கியது.
295 பேர் பலி: தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் விரைவு ரயில் மோதியது. இதில் எதிர் திசையில் வந்த பெங்களூர் - ஹவுரா அதிவிரைவு ரயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம்புரண்டன. நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில் 295 பயணிகள் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மீட்பு பணிகள் மட்டுமே பல மணி நேரம் நீடித்தது. ரயிலில் பயணம் செய்த தங்கள் உறவுகளை தேடி குடும்பத்தினர் கண்ணீருடன் அலைந்த காட்சிகள் இப்போது நினைத்தாலும் நெஞ்சை உறைய வைக்கும் விதமாக இருந்தது. இந்த ரயில் விபத்துக்கு சிக்னல் கோளாறுகளே காரணம் என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்தது.
ஆந்திரா ரயில் விபத்து: கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது. விசாகப்பட்டினத்திலிருந்து ராயகடா நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரயில், பாசஞ்சர் ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 13 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 50 -க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்துக்கு மனித தவறே காரணம் என்று முதலில் தகவல் வெளியானது.
மதுரை ரயில் பெட்டி தீ விபத்து: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மிகப் பயணமாக 60-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவினர் தமிழ்நாட்டிற்கு வந்தனர். தமிழ்நாட்டில் பல்வேறு கோவில்களில் ஆன்மீக பயணம் மேற்கொண்ட இவர்கள் ரயில் பெட்டியை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் பயணம் செய்து வந்தனர்.
கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி இவர்கள் பயணித்த ரயில் பெட்டி , மதுரையில் கழற்றி தனியாக நிறுத்தப்பட்டு இருந்தது. மதுரை ரயில்வே சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் தீடிரென தீ பிடித்தது. இந்த விபத்தில் 9 பயணிகள் உயிரிழந்தனர். ரயில் பெட்டிக்கு உள்ளேயே கேஸ் சிலிண்டர் வைத்து சமைத்ததே விபத்துக்கு காரணம் என விசாரணையில் கண்டறியப்பட்டது.
சிறு சிறு விபத்துக்கள்: மேற்கண்ட மூன்று விபத்துக்களை தவிர பல சிறிய அளவில், உயிரிழப்பு எதுவும் ஏற்படுத்தத விபத்துக்கள் பலவும் நடைபெற்றன. குறிப்பாக கடந்த ஜூன் 11 ஆம் தேதி சென்னை புறநகர் மின்சார ரயிலின் மூன்று பெட்டிகள் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
* ஜூன் 22 ஆம் தேதி சென்னையில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த லோக்மன்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே பவர் வோல்டேஜ் தீ பிடித்தது. எனினும், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தீ விபத்து: * ஜூன் 9 ஆம் தேதி விஜயவாடா - சென்னை சென்ட்ரல் ரயில் பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்டது. எனினும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
* கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி திருச்சியில் இருந்து ஸ்ரீ கங்காநகர் சென்ற ஹம்சஃபார் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் குஜராத்தின் வல்சாத் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்த தீ விபத்தில் சிக்கியது. ரயிலின் பி1 கோச்சில் தீ பிடித்ததும் உடனடியாக ரயில் பெட்டி தனியாக கழற்றி விடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications