குட் நியூஸ்! கட்டுக்குள் வந்த கொரோனா.. தமிழ்நாடு மட்டுமில்லை புதுவையிலும் தொடர்ந்து குறையும் கொரோனா
சென்னை: சில மாதங்களுக்குத் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் வெறும் 3 மாவட்டங்களில் மட்டுமே வைரஸ் பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2ஆம் அலை தொடங்கியது. அந்த சமயத்தில் தேர்தல் பரப்புரைகளும் படு ஜோராக நடக்க வைரஸ் பாதிப்பு மளமளவென அதிகரிக்கத் தொடங்கியது.
குறிப்பாகக் கடந்த மே மாதத்தில் வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்டது. இதையடுத்து முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியதால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

கொரோனா ஊரடங்கு
கடந்த மே மாதம் தொடங்கி மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இடையில் ஜூன் மாத இறுதியில் மட்டும் சில பகுதிகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட அரசு நிர்வாகம் தேவையான இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் நிலைமை கையை மீறிச் செல்வது தடுக்கப்பட்டது. அதன் பிறகு மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் நேற்று 1585 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சென்னை, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மட்டுமே வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டியிருந்தது. சென்னையில் 165 பேருக்கும் கோவையில் 190 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதேபோல ஈரோட்டில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தஞ்சையில் (98), செங்கல்பட்டு மாவட்டங்களிலும் (92) சற்றே அதிகமாக இருந்தது.

எந்தெந்த மாவட்டங்கள்
கொரோனா காரணமாக நேற்று 27 பேர் பலியாகினர். தமிழ்நாட்டில் இதுவரை 34,761 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாகத் திருப்பூரில் ஐந்து பேரும், கோவையில் நான்கு பேரும், சென்னையில் 3 பேரும் உயிரிழந்தனர்.தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 18,603 ஆகச் சரிந்து உள்ளது. செங்கல்பட்டு, ஈரோடு, சேலம், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே 1000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் நேற்று 1,842 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 25,50,710ஆக அதிகரித்துள்ளது.

புதுவையில் என்ன நிலை
தமிழ்நாட்டைப் போலவே புதுவையிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 73 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த நிலையில், 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். புதுவையில் வெறும் 30 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. புதுவையில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 765ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2.33%ஆகவும், உயிரிழப்பு விகிதம் 1.47% ஆகவும் உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 97.91%அக அதிகரித்துள்ளது.

தளர்வுகளால் கொரோனா அதிகரிக்குமா
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது. இருப்பினும், கடந்த காலங்களைப் போல இல்லாமல், இந்த முறை ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல தியேட்டர் திறப்பிற்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறதா என்பது வரும் காலங்களில் தான் தெரியவரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications