ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக இருந்து வந்தது. அவர்கள் சென்னை புரசைவாக்கம், அண்ணாநகர், திருப்பூரை சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டரில் கூறுகையில் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த 25 வயது ஆண், திருப்பூரைச் சேர்ந்தவர் 48 வயது ஆண், அண்ணாநகரைச் சேர்ந்த 54 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா

கொரோனா

இவர்களில் முதல் கூறிய இருவரும் லண்டனிலிருந்து வந்தவர்கள். மூன்றாவது நபர் மதுரையிலிருந்து அண்ணாநகர் வந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மதுரை நபர் வெளிநாட்டுக்குச் செல்லாமலேயே இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

மூன்று பேரும் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள் ஆவார்கள். அமெரிக்காவிலிருந்து 74 வயது முதியவருக்கும், 52 வயது பெண்மணிக்கும், ஸ்விட்சர்லாந்தில் இருந்து வந்த 25 வயது இளம்பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

கீழ்ப்பாக்கம்

கீழ்ப்பாக்கம்

இதையடுத்து அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள் இருவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும், ஸ்விட்சர்லாந்திலிருந்து வந்தவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

இவர்கள் மூவரும் முறையே சென்னை போரூர், புரசைவாக்கம், கீழ்கட்டளை ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள். நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மூன்று பேர்

மூன்று பேர்

இதையடுத்து இன்று இரவு தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு உறுதியானது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.வெளிநாடுகளிலிருந்து சென்னை வந்தவர்களில் 3 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதியானது. நியூசிலாந்தில் இருந்து சென்னை வந்தவர், லண்டனில் இருந்து சென்னை வந்தவர், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இன்னொருவர் மூவருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+