தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 26,465 பேர் பாதிப்பு.. ஒரே நாளில் 197 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 26,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று மிகப்பெரிய உச்சமாக ஒரே நாளில் 26,465 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,23,965 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 197 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,171 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவர்கள்
தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 22,381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 11,73,439 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 1,35,355 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்,

செங்கல்பட்டிலும் அதிகம்
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 6738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2154 பேரும், கோவையில் 2101 பேரும், திருவள்ளூரில் 1384 பேரும், மதுரையில் 1051 பேரும், செங்கல்பட்டில் 857 பேரும், தூத்துக்குடியில் 855 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலத்தில் பாதிப்பு
திருச்சியில் 784 பேரும், திருநெல்வேலியில் 673 பேரும், சேலத்தில் 648 பேரும், ஈரோட்டில் 639 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பெரம்பலூரை தவிர மற்ற எல்லா மாவட்டஙகளிலும் பாதிப்பு 100ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டி உள்ளது.

அதிகபட்ச மரணம் எங்கு
கொரோனா தொற்றால் சென்னையில் ஒரே நாளில் 60 பேர் மரணம் அடைந்துள்ளனர், திருவள்ளூரில் 15 பேர், மதுரையில் 14 பேர், செங்கல்பட்டில் 9 பேர், காஞ்சிபுரத்தில் 9 பேர், சேலத்தில் 9 பேர், கோவையில் 6 பேர், திருச்சியில் 6 பேர், கன்னியாகுமரியில் 6 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். தேனி, தென்காசி, ராணிப்பேட்டை, விருதுநகர் மாவட்டங்களில் தலா 5 பேர் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications