தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 596 பேருக்கு தொற்று.. 705 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 33 ஆயிரத்து 011-ஆக உயர்ந்துள்ளது. கடந்த மாதங்களை காட்டிலும் இம்மாதம் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 705 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து நல்வாய்ப்பாக குணமடைந்து பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 15 ஆயிரத்து 516-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 12,299 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் கொரோனா மட்டுமின்றி சர்க்கரை, சிறுநீரகம், இதயப்பிரச்சனை உள்ளிட்ட வேறு சில இணை வியாதிகளுக்கும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட வாரியாக என எடுத்துக்கொண்டால் சென்னை, கோவை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாகவும் பெரம்பலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பூஜ்யத்திலும் உள்ளது.
இதனிடையே தமிழகத்தில் இன்று மட்டும் 61 ஆயிரத்து 023 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் 596 பேருக்கு மட்டும் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வெளியாகியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications