தமிழகத்தில் இன்று முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு.. எதற்கெல்லாம் தளர்வுகள்? முழு விவரம்!
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் தியேட்டர்கள், உணவகங்கள் 100 சதவீதம் வாடிக்கையாளர்ளுடன் இயங்க இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டம் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் மார்ச் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று
அதே வேளையில் தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று மழலையர் பள்ளிகள் சங்கத்தினர் தமிழக முதல்வரை சந்தித்து 2 ஆண்டுகளுக்கு மேல் பள்ளிகளை திறக்காமல் இருப்பதை கருத்தில் கொண்டு இந்த முறை பள்ளிகளை திறக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தனர். அதன்படி வரும் 16 ஆம் தேதி முதல் நர்சரி, மழலையர், விளையாட்டுப் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இறப்பு நிகழ்ச்சி
மேலும் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம். இறப்பு நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம். தமிழகத்தில் இன்று முதல் பொருட்காட்சிகள் நடத்த அரசு அனுமதி அளித்தது. அதே நிலையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி
சமுதாய, கலாச்சார, அரசியல் நிகழ்வுகளுக்கான தடைகள் தொடர்கிறது. அது திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்களுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

வணிக வளாகங்கள்
ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்களிலும் 100 சதவீத வாடிக்கையாளர்களை கொண்டு இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அது போல் உணவகங்களில் இதுநாள் வரை 50 சதவீதம் பேர் வரை மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த தளர்வுகள் எல்லாம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. ஏற்கெனவே தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications