கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்.. சென்னையில்தான் குறைவு
சென்னை: கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. இதுவரை, கிட்டத்தட்ட 44,000 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 66,000 பாலூட்டும் பெண்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.
பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தின் டேட்டாப்படி, 43,855 கர்ப்பிணிப் பெண்கள் ஜூலை 18ம் தேதிவரை தடுப்பூசி பெற்றுள்ளனர்.

அவர்களில், 43,796 பேருக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டது, மேலும் 59 பெண்கள், அவர்கள் கர்ப்பமாக இல்லாதபோது முதல் டோஸைப் பெற்றனர், கர்ப்பமாகிவிட்டபின் இரண்டாவது டோஸைப் பெற்றனர்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் 65,929 டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. 46 சுகாதார பிரிவு மாவட்டங்களில், விழுப்புரம் அதிகபட்சமாக தடுப்பூசி போட்ட கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 3,108 என்ற அளவில் உள்ளது.

அரியலூரில் 3,070 கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 867 கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நகர மக்கள் தொகையை ஒப்பிட்டால் இது மிக குறைந்த எண்ணிக்கை. செங்கல்பட்டு மற்றும் ராமநாதபுரத்தில் முறையே 14 மற்றும் 49 பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பாலூட்டும் பெண்களில், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் தலா 6,000 பெண்களுக்கு தடுப்பூசி போட்டன. சென்னையில், 2,680 பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

கர்ப்பிணி பெண்கள் (2,479) மற்றும் பாலூட்டும் பெண்கள் (3,603) ஆகிய இரு பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் நீலகிரி மாவட்டம் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், கிராமப்புறங்களில், கிராம சுகாதார செவிலியர்கள் (வி.எச்.என்) கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுடன் நெருக்கமாக தொடர்பில் உள்ளார்கள். எனவே பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவது ஈஸியான பணியாக உள்ளது. சென்னையில் அப்படி தொடர்பு இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications