தப்பித்த சிஎஸ்கே.. ரூ.18 கோடிக்கு ஆப்பு.. கம்பேக் போட்டியில் காயம்! 8 பந்துகளில் ஓய்வறை ஓடிய பதிரானா

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கேகேஆர் அணியால் ரூ.18 கோடி கொடுத்து வாங்கப்பட்ட நட்சத்திர வீரர் பதிரானா கம்பேக் போட்டியிலும் காயம் அடைந்து ஓய்வறைக்கு திரும்பி இருக்கிறார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் இம்பேக் பிளேயராக களமிறங்கிய பதிரானா, எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் 2வது ஓவரிலேயே கால்களை பிடித்து கொண்டு ஓய்வறைக்கு சென்றுவிட்டார்.

சிஎஸ்கே அணியில் தோனியின் மகனை போல் உருவாக்கப்பட்டவர் பதிரானா. 2023 ஐபிஎல் தொடரில் பதிரானாவின் அபாரமான பவுலிங்கும் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணம். ஆனால் பதிரானா அடுத்தடுத்த சீசன்களில் காயம் காரணமாக ஏராளமான போட்டிகளை தவறவிட்டார். இதனால் பதிரானாவை ரிலீஸ் செய்ய வேண்டிய நிலைக்கு சிஎஸ்கே அணி வந்தது.

Pathirana

இதனிடையே அவரின் பவுலிங் ஆக்‌ஷனும் மாற்றம் அடைந்தது. இதனால் பதிரானாவால் முன்பை போல் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால் ஐபிஎல் ஏலத்தில் ரூ.18 கோடிக்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டார் பதிரானா. இதனால் பதிரானா கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, காயம் என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

இலங்கை அணி நிர்வாகமும் பதிரானா காயத்தில் இருந்து குணமடைந்த பின்னரே ஐபிஎல் தொடரில் களமிறங்க வேண்டும் என்று பிடிவாதம் காட்டியது. இந்த சீசனில் கேகேஆர் அணி 11 போட்டிகளில் விளையாடிய போதும் பதிரானா ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பதிரானா இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார்.

பழைய ஸ்டைலில் நெருப்பை போல் முதல் ஓவரை வீசிய பதிரானா, வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இருந்தாலும் 2 ஒய்டுகளை வீசினார். இதன்பின் பவர் பிளேவிலேயே அடுத்த ஓவரை வீச பதிரானா அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்தை வீசிய பின் பதிரானா தொடையை பிடித்தார். இருந்தாலும் 2வது பந்தை வீசினார். இந்த பந்துக்கு பின் பதிரானா காயத்தின் தன்மையை உணர்ந்தார்.

இதனால் வேறு வழியின்றி மீண்டும் ஓய்வறை நோக்கி சென்றார். இது கேகேஆர் அணி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 18 கோடி கொடுத்து வாங்கப்பட்ட வீரர் வெறும் 8 பந்துகளில் காயம் அடைவதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னொரு பக்கம் சிஎஸ்கே ரசிகர்கள் தப்பித்தோம் என்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+