ஒரே நாளில் 11 குழந்தைகள்.. மொத்தமாக 142 குழந்தைகள்.. தமிழகத்தில் தீவிரம் அடையும் கொரோனா பாதிப்பு!
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் மொத்தமாக 142 குழந்தைகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் 138 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மொத்தம் 906 பேருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1035 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா காரணமாக யாரும் பலியாகவில்லை.
தமிழகத்தில் மொத்தமாக 142 குழந்தைகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இப்படி நாளுக்கு நாள் கொரோனா காரணமாக குழந்தைகள் பாதிப்பிற்கு உள்ளாவது வழக்கமாகி வருகிறது.
இன்று மட்டும் தமிழகத்தில் 11 குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. குழந்தைகளிலும் ஆண் குழந்தைகளுக்குத்தான் அதிகமாக கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தம் 66 பெண் குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் 76 ஆண் குழந்தைகளுக்கு தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமாக 1553 ஆண்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் 770 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் 60க்கும் அதிகமான குழந்தைகள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிறந்து ஒரு வாரம் ஆன குழந்தைகள் கூட அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் கொரோனா ஏற்படாது என்று கூறப்பட்டது. ஆனால் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்கு எப்படி தமிழகத்தில் கொரோனா ஏற்படுகிறது என்பது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications