சென்னையில் அந்த ஒரு தெரு.. அடுத்தடுத்த வீடுகளில் 13 பேருக்கு கொரோனா.. கலக்கத்தில் கோயம்பேடு
சென்னையில் பாடிக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படடுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் பாடிக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படடுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 47 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 570 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதன் மூலம் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.
சென்னையில் அதிகமாக ராயபுரத்தில் 145 பேருக்கு நேற்று வரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவிக நகரில் 85 பேருக்கு நேற்று வரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோடம்பாக்கம் எப்படி
சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட மண்டலங்களில் 5வது இடத்தில் கோடம்பாக்கம் உள்ளது. கோடம்பாக்கத்தில் நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கோடம்பாக்கத்தில் நேற்று வரை 54 கேஸ்கள் பதிவாகி உள்ளது. இன்று சென்னையில் பதிவான கேஸ்களில் எத்தனை கேஸ்கள் கோடம்பாக்கத்தில் இருந்து வெளியானது என்று விவரம் வெளியாகவில்லை. இதற்கான விவரம் நாளை முழுமையான சோதனைக்கு பின் வெளியிடப்படும்.

கோயம்பேடு எப்படி
கோடம்பாக்கம் மண்டலத்திற்கு கீழதான் கோயம்பேடு பகுதி வருகிறது. இங்கு கொரோனா பாதிப்பின் வேகம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இவர் மூலம் கோயம்பேடு மார்க்கெட் சென்ற பலருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை மூடும் முடிவில் சென்னை மாநகராட்சி உள்ளது.

பாடிக்குப்பம் தெரு
இந்த நிலையில்தான் சென்னையில் பாடிக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படடுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு அருகிலேயே உள்ளது. இங்குதான் அடுத்தடுத்து 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு 10 பேருக்கு கொரோனா இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

ஸ்டேஜ் 2 பரவல்
இவர்கள் எல்லோருக்கும் ஸ்டேஜ் 2 பரவல் மூலம் கொரோனா ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரம் முன் இங்கு ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது. அவரை தொடர்பு கொண்டதன் மூலம் அங்கு பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. அடுத்தடுத்த வீடுகளில் இப்படித்தான் கொரோனா பரவி உள்ளது. இப்போது புதிதாக கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார்கள்,எங்கே எல்லாம் சென்றார்கள் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் பலர்
இந்த 13 பேர் மூலம் இன்னும் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட தெருவாக இந்த சென்னை பாடிக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெரு மாறியுள்ளது. இந்த தெரு தற்போது மொத்தமாக மூடப்பட்டுள்ளது. அங்கிருக்கும் மக்கள் எல்லோருக்கும் விரைவில் கொரோனா சோதனை செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications