மக்களே.. தமிழ்நாட்டில் ஒருவரிலிருந்து 33 பேராக அதிகரித்த ஒமிக்ரான் பாதிப்பு! நாட்டிலேயே 3வது இடம்
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை விரைவில் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
Recommended Video
ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது . இதன் காரணமாக ஓமிக்ரான் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழகம் தற்போது 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 245 பேருக்கும் அதிகமானோருக்கு தற்போது ஓமிக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நைஜீரியா பயணி
தமிழ்நாட்டில் ஏற்கனவே 1 ஓமிக்ரான் கேஸ் கடந்த வாரம் பதிவானது. இவர் நைஜீரியாவில் இருந்து தமிழ்நாடு வந்த பயணி. அவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு கொரோனா இருந்தது.

அறிகுறி
இதுபோக வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 104 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் 57 நபர்களுக்கு ஓமிக்ரான் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இவர்களுக்கு எஸ் ஜீன் இல்லை. இந்தியாவில் பொதுவாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சோதனை செய்யும் போது அவர்களின் மாதிரிகளில் குறிப்பிட்ட சில ஜீன்கள் இருக்கிறதா என்று சோதனை செய்வார்கள்.

எஸ் ஜீன்
அதாவது கொரோனாவில் இருக்கும் E, N, S மற்றும் Rd Rp போன்ற ஜீன்கள் நோயாளியின் மாதிரியில் இருக்கிறதா என்று சோதனை செய்வார்கள். இதில் எஸ் ஜீன் இல்லாதபட்சத்தில் அது ஓமிக்ரான் சந்தேக கேஸ்களாக பார்க்கப்படும். இவர்கள் உடனே தனிமைப்படுத்தப்படுவார்கள். இவர்களுக்கு ஜீன் சோதனை செய்யப்படும்.

எத்தனை பேர்
தமிழ்நாட்டில் 57 பேர் எஸ் ஜீன் இல்லாமல் இப்படி தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களின் ஜீன் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், இதில் 33 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டு ஜீன் முடிவுகள் வெளியாகி உள்ளது. இன்று மொத்தமாக 34 பேரின் முடிவுகள் வெளியான நிலையில் 33 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அறிகுறி இல்லாத நோயாளிகள்.

20 பேர்
இதனால் தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பாதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது. இதுபோக கூடுதலாக 20 பேரின் ஜீன் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஓமிக்ரான் உள்ளதா என்ற அறிவிப்பு ஜீன் முடிவு வெளியான பின் தெரிய வரும்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications