சீனாவை முந்திய தமிழகம்.. இன்று மட்டும் 3949 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 86 ஆயிரத்தை கடந்தது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 3949 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை தொடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 86224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் இதன் மூலம் சீனாவை முந்தி இருக்கிறது. சீனாவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 83,512 என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் 6 மாவட்டங்களில் தீவிரமான லாக்டவுன் கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனாலும் கூட இன்னொரு பக்கம் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க இன்னொரு பக்கம் டிஸ்சார்ஜ் ஆகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கையும் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது.

இன்று நிலைமை

இன்று நிலைமை

தமிழகத்தில் இன்று 3949 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 86224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 37331 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2212 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 47749 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகம் இதன் மூலம் சீனாவை முந்தி இருக்கிறது. சீனாவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 83,512 என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை நிலைமை

சென்னை நிலைமை

தமிழகத்தில் இன்று கொரோனா காரணமாக 62 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 1141 பேர் பலியாகி உள்ளனர். இன்னொரு பக்கம் சென்னையில் நிலைமை மிக மோசமாகி வருகிறது. சென்னையில் இன்று 2167 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக 55969 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்கள்

மற்ற மாவட்டங்கள்

சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கேஸ்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. மதுரையில் இன்று 290 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 2302 பேருக்கு இன்று மதுரையில் கொரோனா ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இன்று 187 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 5242 பேருக்கு இன்று மதுரையில் கொரோனா ஏற்பட்டுள்ளது.

அதிக டெஸ்ட்கள்

அதிக டெஸ்ட்கள்

தமிழகத்தில் தினமும் அதிக அளவில் டெஸ்ட்கள் செய்யப்படுகிறது. தமிழகத்தில் இன்று 30005 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 30039 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 1086569 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 1140441 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+