சென்னையில் 10 வயதுக்கும் கீழான 4 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் 4 குழந்தைகளுக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 27 பேர்.

சென்னையில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 வயது, 4,5 மற்றும் 7 வயது குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 752 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
மூன்றாம் நிலைக்கு நுழைஞ்சுட்டோம்... திருவண்ணாமலை கலெக்டர் உருக்கமான வீடியோ
கடந்த 24 மணிநேரத்தில் 2 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனையடுத்து கொரோனாவால் தமிழகத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆகவும் அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications