விடாமல் அதிகரிக்கிறது.. தமிழகத்தில் ஒரே நாளில் 5879 கொரோனா கேஸ்கள்.. மொத்தமாக 251738 பேர் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 5879 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 251738 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 15 நாட்களாக தினமும் 5000+ கேஸ்கள் வருகிறது. கடந்த மூன்று நாட்களாக ஒரே அளவில் தமிழகத்தில் கேஸ்கள் வர தொடங்கி உள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1074 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 100877 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை எப்படி

சென்னை எப்படி

சென்னையில் மொத்தமாக 1 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 56738 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் இன்று 7010 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.மொத்தமாக தமிழகத்தில் 190966 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சோதனை எத்தனை

சோதனை எத்தனை

இன்று 60580 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. 2718718 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 58243 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 2618512 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

இன்னொரு பக்கம் தமிழகத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக 90+ கேஸ்கள் தமிழகத்தில் வர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 99 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 4034 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

Recommended Video

    Bakrid பண்டிகைக்கு விலங்குகளை பொது இடங்களில் பலியிட அனுமதி இல்லை | Oneindia Tamil
    சென்னைக்கு அடுத்து

    சென்னைக்கு அடுத்து

    சென்னைக்கு அடுத்து இன்று செங்கல்பட்டில் 314 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 14866 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருவள்ளூரில் 305 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 14128 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று காஞ்சிபுரத்தில் 368 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 9384 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+